Search

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

 

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Administrator) (காலிப்பணியிடம் 1)

இளங்கலை பட்டப்படிப்பு (B.Tech., B.Sc) மற்றும் Diploma in computers/IT மற்றும் தர மேலாண்மையியல் (Data Management), செயல்முறை ஆவணங்கள் தயாரிப்பு (Process Documentation) மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்கள் (Web based reporting formats)-ல் மாநில/மாவட்ட/தன்னார்வ தொண்டு நிறுவனம் இவைகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் தேவை.

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம் ரூ.18,000/- ஆகும்.

பதவி - வழக்குப் பணியாளர்(Case Worker); காலிபணியிடங்கள் -4 

வழக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், சமூகவியல் முதுநிலை சமூக உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும்

பாதுகாப்பாளர்: (Security Guard) (காலிப்பணியிடங்கள் 2):

மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடங்கள்  2):

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 05.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை கேட்டுக்கொள்கிறார்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment