Good And Bad Foods For Bones: வயது வந்தோருக்கு அவர்களின் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 1000 மி.கி கால்சியம் தேவைப்படுகிறது என ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி கூறினார். நம் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மோசமான எலும்பு ஆரோக்கியம் ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், பிற்கால வாழ்க்கையில், எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான எலும்புகளுக்கு பால் மட்டும் தீர்வு அல்ல. நமது தினசரி உணவில் போதுமான அளவு கால்சியம் சத்தை வழங்குவதற்கு, எலும்புகளை வலுப்படுத்தும் சில உணவுகளும் தேவை. அதன் பின்வரும் பட்டியல் காணலாம்.
நம் உடலை பலப்படுத்தும் உணவுகள்:
- தினமும் 50 கிராம் கீரையுடன், 6 கேரட்களை சேர்த்து ஜூஸாக அடித்து ஒரு கிளாஸ் அருந்தவும். இதில் தோராயமாக 300 மி.கி கால்சியம் உள்ளது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
- ராஜ்மா, காபூலி சனா, கருப்பட்டி, குலீத் போன்ற முழு பருப்பு வகைகளிலும், 100 கிராம் பருப்பில் 200 முதல் 250 கிராம் வரை கால்சியம் உள்ளது.
- தினமும் 2-3 தேக்கரண்டி வெள்ளை மற்றும் கருப்பு எள் சாப்பிடுங்கள்.
- கீரை, கோஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
- போதுமான புரதங்களை உட்கொள்வதும் அவசியம். முட்டை, நட்ஸ் ஆகியவற்றில் புரதச்சத்து நிறைந்தவை.
- சிட்ரஸ் நிறைந்த உணவு, உங்கள் உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சமாகும். பெர்ரி, ஆரஞ்சு திராட்சைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை:
- அதிக சோடியம் உள்ள உணவுகள்
- சர்க்கரை அதிகம் உள்ள தின்பண்டங்கள்
- கார்பனேற்றப்பட்ட பானங்கள்: அவை சர்க்கரை மற்றும் காஃபின் நிறைந்தவை மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும் பாஸ்போரிக் அமிலத்தைக் கொண்டிருக்கின்றன.
- இறைச்சியின் புரதத்தை அதிகமாக உட்கொள்வதும் நல்லதல்ல.
- அதிக காஃபின் உள்ளடக்கம் அல்லது அதிகப்படியான காபி, தேநீர் குடிப்பதாலும் எலும்புகளில் இருந்து கால்சியம் இழப்பு ஏற்படலாம்.
- புகைபிடித்தல் மற்றும் புகையிலை நுகர்வு கால்சியம் குறைவதற்கு வழிவகுக்கிறது.
எலும்புகள் முக்கியமாக கால்சியத்தால் ஆனவை மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை ஒருவர் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். இவை தவிர, உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறையும் எலும்பு அடர்த்தியை பாதிக்கும்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment