ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் உடலில் ஹார்மோன்கள் சீராக இயங்கினால் தான் மட்டுமே உடல் மற்றும் மன நலத்துடன் வாழ முடியும். நாம் சிரிப்பதற்குக் கூட ஹார்மோன்கள் சுரக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சில நேரங்களில் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வினால் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்கின்றனர் மக்கள். அதிலும் ஆண்களை விட பெண்களுக்குத் தான் ஹார்மோன்களின் சமநிலையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு, குறைவான மாதவிடாய் இரத்தப்போக்கு, நடு சுழற்சி புள்ளிகள், கருப்பை நீர்க்கட்டிகள், பிசிஓடி போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் தற்போது அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. முதலில் ஏன் ஏற்படுகிறது? ஹார்மோன் சமநிலையின்மை என்றால் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..
ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் என்றால் என்ன? நம்முடைய உடலில் பல்வேறு செயல்பாடுகளை ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரன் எனப்படும் பெண் பாலின ஹார்மோன்கள் முக்கியமாக கருப்பைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தான் பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்படும் போது தான் பெண்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கருவுறுதலில் பிரச்சனை, பிசிஓடி, பிசிஓஎஸ், அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஹார்மோன் சமநிலையின்மைக்கு சிகிச்சையளிப்பது எப்படி? இன்றைக்கு உள்ள பெரும்பாலான மருத்துவமனையில் பிசிஓடி பிரச்சனைக்குத் தான் பெண்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சரிசெய்ய வேண்டும் என்றால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் இது நிச்சயம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதிகப்படியான ஸ்டீராய்டுகளை நாம் பயன்படுத்தும் போது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே இதுப்போன்ற சூழலில் நாம் மருந்து மாத்திரைகளுக்குப் பதிலாக நம்முடைய உணவு பழக்கவழக்கம், அதிக நேரம் தூங்குவது, மன அழுத்தமின்றி வாழ்வது, உடல் இயக்கத்திற்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்வது போன்ற விஷயங்களை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும்.
இவ்வாறு மேற்கொண்டாலும் சில அவசர காலங்களில் மருத்துவ உதவி என்பது நிச்சயம் தேவைப்படும். இதுப்போன்ற பெண்களுக்கு சிறந்த தீர்வு ஆயுர்வேதமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். நோய்க்கான காரணத்தையும், போக்கையும் மாற்றுவதற்கு இந்த சிகிச்சைகள் உதவியாக உள்ளது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் வழங்கப்படும் மூலிகைகள், பஞ்சகர்மா சிகிச்சைகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஹார்மோன் சமநிலைப்பிரச்சனைக்கு தீர்வாக அமைவதோடு, அதிக ஸ்டீராய்டு மருத்துகளை உட்கொள்ளவும் தேவையில்லை. எனவே உங்களது வாழ்க்கைமுறையில் முதலில் மாற்றம் கொண்டு வாருங்கள். பின்னர் தேவைப்படும் பட்சத்தில் ஆயுர்வேதத்தின் உதவியை நாட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
No comments:
Post a Comment