உறுதியான பெண்களுக்கென சில குணாதிசியங்கள் உள்ளன. அத்தகைய குணாதிசியங்களைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். பெண்கள் என்றாலே பொறுமை என்று முன்பெல்லாம் கூறுவது வழக்கம். அதே போல், பெண்களின் குணங்கள் என்று பார்த்தால் அதற்கு ஒரு பெரும் பட்டியலே இருக்கும். ஆனால், இந்தப் பதிவில் உறுதியான பெண்கள் என்னென்ன குணாதிசியங்கள் கொண்டிருப்பார்கள் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
நம்பிக்கை : பொதுவாக உறுதியான பெண்களுக்கு நம்பிக்கை தான் பக்க பலமாக இருக்கும். அவர்களிடத்தில் அசாதாரணமான குணங்கள் நிறைந்து இருக்கும். அவர்கள் எப்போதும் தங்களால் என்ன முடியும் என்பதை நன்கு அறிந்தே செயல்படுவார்கள். ஆம், நம்பிக்கையுடன் தங்கள் மதிப்பறிந்து செயல்படுவதே அவர்களின் பலம். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
சுதந்திரம்: உறுதியான பெண்கள் எப்பொழுதும் சுதந்திரமாக செயல்படுவது வழக்கம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை போல தன்னிறைவு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கென்று தனி இலக்குகள், விருப்பங்கள், மற்றும் லட்சியம் என அமைத்து, அதை நோக்கி நம்பிக்கையுடன் சுதந்திரமாக பயணிப்பதே அவர்களின் சிறப்பு.
சமத்துவம் : ஆண், பெண் என்ற வித்தியாசம் அல்லது பேதம் பார்க்காமல், தங்களை சமத்துவத்துவத்துடன் அனைவரும் பார்க்க வேண்டும் நடத்த வேண்டும் என்று எண்ணுவார்கள். சமமான மரியாதை அளிக்கப் பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். எந்த விதமான பேதமோ, தவறான கையாளுதலோ இருந்தால், அதனை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.
தெளிவான தகவல் பரிமாற்றம் : எந்த ஒளிவு மறைவும் இல்லாத உண்மையான தகவல் பரிமாற்றத்தையே அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், தேவைகள் மற்றும் யோசனைகளை எந்த வித தயக்கமும் இன்றி தெளிவாக வெளிப்படுத்துவார்கள். அதே போல் அவர்களின் துணையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
எல்லைகள் அறிந்து செயல்படுதல் : அவர்களின் எல்லைகள் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். தங்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அறிந்து அவர்கள் தங்கள் நல்வாழ்வு குறித்து விழிப்புடன் இருந்து அதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். தங்களுக்கான நேரத்தை அமைத்து கொள்வார்கள். இது அவர்களது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இந்த குணங்கள் அத்தனையும் உங்களுக்கும் உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் ஒரு உறுதியான பெண். இந்த மன உறுதி கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை செய்து முடிக்க பக்க பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
No comments:
Post a Comment