ஏதேனும் டிகிரி இருக்கா? சென்னையில் அலுவலக உதவியாளர் வேலை - Agri Info

Adding Green to your Life

April 26, 2023

ஏதேனும் டிகிரி இருக்கா? சென்னையில் அலுவலக உதவியாளர் வேலை

 

சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவி, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவி: அலுவலக உதவியாளர் (பணி காலம்: 3 மாதங்களுக்கு மட்டுமே)

எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெற்றிருக்க வேண்டும்; ஆங்கில தட்டச்சில் அனுபவம் இருக்க வேண்டும்; கணினி அறிவு இருத்தல் வேண்டும். நீதிமன்றம்/ தீர்பாயங்களில் முன்னனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது ஆகும்.

வயது வரம்பு: 21 - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.greentribunal.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலமாக 03.05.2023 அன்றைக்குள் Registrar, National Green Tribunal, Southern Zone Bench, kalas Mahal, PWD Estate, Chepauk, chennai - 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment