இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவு முறைகள் தான் உடல் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது என்று சொல்ல வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுகிறோம் என்று, பெயர் தெரியாத உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகள் போன்றவற்றால் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது.
எனவே தான் நம்முடைய வாழ்வில் ஆரோக்கியமான உணவுமுறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதுவரை சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகள் தான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நம்மில் பலர் அறிந்திருந்தாலும், இதை விட மோசமான சில உணவுகள் உள்ளது என்றும், இதுப்போன்றவற்றை கட்டாயம் நம்முடைய வாழ்வில் தவிர்க்க வேண்டும் என்கின்றார் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் டயட் இன்சைட் நிறுவனனருமான அமன் பூரி. ஆரோக்கியமான வாழ்விற்குத் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.
மார்கரின் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் : (Margarine and Refined oils) இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எண்ணெய்கள் பூஜ்ஜிய ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதாக உள்ளது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் படிந்து உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்காக அமைகிறது.
பாக்கெட் தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனி : பிஸ்கட், குக்கீஸ், நம்கீன், தானியங்கள், மியூஸ்லி, சிப்ஸ், பேக்கரி போன்றவற்றில் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெய்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதை நம்முடைய அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளும் போது உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்கிறது. மற்றும் உடல் பருமனும் ஒருபுறம் அதிகரிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை நாம் அதிகளவில் பயன்படுத்தும் போது, பல உடல் நலப்பாதிப்புகள் நமக்கு ஏற்படுகிறது. குறிப்பாக பதப்பட்ட உணவுப்பொருள்களில் சோடியம் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் அதிகளவில் உள்ளதால், நாம் சாப்பிடும் போது நமக்கு சர்க்கரை நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்பட நாள்பட உடல் நலப்பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது.
வெள்ளை சர்க்கரை : ஜாம், ஜெல்லி, இனிப்பு தின்பண்டங்கள் மற்றும் பேக்கரி பொருள்களில் அதிகளவு வெள்ளை சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இதில் எந்தவித ஊட்டச்சத்துகளும் இல்லை. எனவே இதற்கு மாற்றாக எலுமிச்சை, இளநீர், பழங்கள், அத்திப்பழங்கள், தேன், வெல்லம், திராட்சை, உலர்ந்த பாதாமி பழங்கள் போன்றவற்றை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும்.
மேலும் நிறைவுற்ற கொழுப்புகளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது மைதா, சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்த்தல் போன்ற ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உங்களது உணவுமுறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
0 Comments:
Post a Comment