தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டமும் திண்டுக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் HCL நிறுவனமும் இணைந்து ஓர் பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.
HCL நிறுவனம் TechBee திட்டத்தின் வாயிலாக 2023 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதிய அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் (Matrie/CBSE/ICSE) பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை அளிக்கிறது.
அதற்கான தேர்வு Online ல் 28, 29 மற்றும் 30 ஏப்ரல் 2023 (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமை) ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடக்கின்றது. பழனி கல்வி மாவட்ட மாணவர்கள் ஒட்டன்சத்திரத்திலுள்ள Christian Engineering College தேர்வு மையத்திலும், திண்டுக்கல் கல்வி மாவட்ட மாணவர்கள் திண்டுக்கல் நகரத்திலுள்ள RVS College of Engineering and Technology தேர்வு மையத்திலும் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் Aadhaar card, Passport Photo1 Android Mobile phone & மதிய உணவு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், HCL TechBee வழங்கும் பயிற்சி மற்றும் வேலையுடன் உயர் கல்வியை BITS Pilani/SASTRA/AMITY/KL University/IIM Nagpur பல்கலைக்கழகத்தில் HCL வழங்கும் உதவித் தொகையோடு படிக்கலாம். பயிற்சியின் போது 7வது மாதம் முதல் 12வது மாதம் வரை உதவித் தொகையாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
இந்த தேர்வில் 2023ல் தேர்வு எழுதியுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இத்தேர்விற்கு வரும் மாணவர்கள் https://forms.office.com/r/VruvmhzKQi என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு தேர்விற்கு வரவும். பதிவு செய்யாத மாணவர்களும் நேரடியாக தேர்விற்கு வரலாம்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment