கோடைக்காலம் வந்தாலே.. எப்படியெல்லாம் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் நிறைய ஏற்படும். இந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதோடு அதிகப்படியான நொறுக்குத் தீனிகளையும் நாம் சாப்பிடுவோம்.
இதனால் ஒரு புறம் நம்முடைய உடல் எடை அதிகரிக்கிறது. இருந்தப் போதும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு கோடைக்காலம் தான் ஏற்றதாக கருதப்படுகிறது. குளிரோ, பனியோ இல்லாததால், கோடை காலத்தில் காலையிலேயே வாக்கிங் முதல் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை நாம் எவ்வித இடையூறு இல்லாமல் நம்மால் மேற்கொள்ள முடியும்.
இதோடு அதிகமான வியர்வையும் உடலிருந்து வெளியேறுவதால் வழக்கத்தை விட தண்ணீர் அதிகமாக பருகுவோம். அதிக தண்ணீர் அருந்துவதும் நம்முடைய உடல் எடை குறைப்பிற்கு சிறந்த வழியாக அமைகிறது. மேலும் ஆராய்ச்சிகளின் படி, அதிக வெப்பம், நமக்கு பசி உணர்வை ஏற்படுத்தாது என்பதால், குறைவாக சாப்பிடுகிறோம். எனவே நம்முடைய உடல் எடையும் குறைகிறது. எனவே கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு என்னென்ன ஆரோக்கிய உணவுளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
பெர்ரி : குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துகள் உள்ளதால் உடல் எடை குறைப்பிற்கு சிறந்த பழமாக கருதப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்றவையும் ஆரோக்கியமான உடல் எடைக்குறைப்பிற்கு சிறந்த தேர்வாக உள்ளது.
தர்பூசணி : கோடைக்காலத்தில் மக்களால் அதிகம் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றாக உள்ளது தர்பூசணி. இதில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உடல் எடை குறைகக உதவியாக உள்ளது.
கீரை : முன்னதாக நடத்திய ஆய்வுகளின் படி, தினமும் கீரையை உட்கொள்பவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளை எரிக்கவும் உதவியாக உள்ளது.
கிரீன் டீ : வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்கு கிரீன் டீ உதவியாக உள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் காஃபின் அதிக அளவில் இருப்பதால் உடல் எடை கணிசமாக குறைய உதவியாக உள்ளது.
திராட்சைப்பழம் : திராட்சைப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் பண்புகள் உள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள என்சைம்கள் காரணமாக இது விரைவான எடை இழப்புக்கு உதவியாக உள்ளது.
இதோடு அதிக அளவு தண்ணீர் குடிப்பது, தினமும் உடற்பயிற்சியை மறக்காமல் மேற்கொள்வது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் நீங்கள் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment