உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவும் டிடாக்ஸ் முறை.. நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்..! - Agri Info

Adding Green to your Life

April 12, 2023

உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவும் டிடாக்ஸ் முறை.. நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்..!

 தற்போது டிடாக்ஸ் என்ற வார்த்தை பிரபலமடைந்து வருகிறது. பலர் இன்று டிடாக்ஸ் செயல்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவது மிகவும் முக்கியமான காரியம் ஆகும். உடலில் காணப்படும் தேவையற்ற நச்சுப்பொருட்களை அகற்றும் இந்த செயல்முறை டிடாக்சிஃபிகேஷன் (Detoxification) என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.

நொறுக்கு தீனிகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை ஆசைக்காக சாப்பிட்டு விட்டு, பின்னர் வருத்தப்படுவது பலரது வழக்கம். எனினும், இதனை எளிதில் எதிர்கொள்ள உதவும் ஒரு எளிமையான வழியே டிடாக்ஸ் ஆகும்.

டிடாக்ஸ் என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. இந்த செயல்முறையின் போது நீங்கள் ஒரு சில பானங்களை பருக வேண்டும் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

உடலில் உள்ள நச்சுகளை அவ்வப்போது அகற்றினால் தான் உடலானது இயற்கையான முறையில் செயல்பட ஆரம்பிக்கும். டிடாக்சிஃபிகேஷன் என்பது ஒரு பழைமையான மற்றும் இயற்கையான செயல்முறை ஆகும். இந்த செயல்முறையின் போது உடலில் உள்ள கழிவுகள், பழைய மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, உடலின் செயல்பாடானது மீட்டமைக்கப்படுகிறது.

டிடாக்சிஃபிகேஷன் செயல்முறையை மேற்கொள்ளும்போது, இரசாயனங்கள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், வெள்ளை சர்க்கரை, காபின், புகையிலை போன்றவற்றை அகற்ற வேண்டும். அதே சமயம், அதிகப்படியான தண்ணீர், நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் டிடாக்ஸ் செயல்முறையை எளிதாக்கும்.

இயற்கையான முறையில் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும் 7 டிப்ஸ்:-

அமிலத்தை உருவாக்கக்கூடிய கொழுப்பு நிறைந்த உணவுகளான பால் சார்ந்த பொருட்கள், பிரெட், பேக் செய்யப்பட்ட உணவுகள், இறைச்சி மற்றும் குறிப்பாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட சர்க்கரை மற்றும் பொரித்த கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்கவும்.
காரத்தன்மை நிறைந்த உணவுகள், முழு சைவ உணவுகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளவும். இவை உடலை சுத்தப்படுத்த உதவக்கூடும்.
காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும். இலைக் காய்கறிகள் நச்சுகளை அகற்ற சிறந்தவை. இது இரைப்பை குடல் மற்றும் ஒட்டுமொத்த உடலையும் நச்சுகள் இல்லாமல் வைக்க உதவுகிறது.
பூண்டு, சிவப்பு நிற கிராம்பு, மற்றும் காய்கறி சாறு போன்றவையும் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகின்றன. மேலும் கோதுமைப்புல் சாறு, புதினா கொத்தமல்லி சாறு, மற்றும் தக்காளி கீரை சாறு போன்றவற்றையும் நீங்கள் கருதலாம்.
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற வியர்த்தல் என்பது ஒரு முக்கியமான செயல்முறை ஆகும். ஆகையால் நச்சுகளை நீக்குவதற்கு தேவையான வியர்த்தல் செயல்முறையைத் தொடங்க உடல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி போன்றவை முக்கியமானதாக கருதப்படுகிறது.
டிடாக்ஸ் பானங்கள் மற்றும் மூலிகை பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.
மது பானங்கள் குடிப்பது மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றை கட்டுப்படுத்திக் கொள்ளவும். முடிந்த வரை அவற்றை தவிர்ப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


No comments:

Post a Comment