சன் ஸ்கிரீன் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..? அப்ளை செய்யும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க..! - Agri Info

Adding Green to your Life

April 14, 2023

சன் ஸ்கிரீன் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..? அப்ளை செய்யும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க..!

 சம்மர் வந்தாச்சு. இனி வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு கட்டாயம் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். உண்மையில், எந்த பருவமாக இருந்தாலும் சரி, ஆண்டு முழுவதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கும் ஆயுதம் தான் சன்ஸ்கிரீன். சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடம் இருந்து சருமத்தை காக்கும் ஒரு தடையாக சன்ஸ்கிரீன் செயல்படுகிறது.

சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சரும சுருக்கங்கள், முன்கூட்டிய வயதாவ தற்கான அறிகுறிகள், சரும எரிச்சல் போன்ற பல பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். அதோடு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சரும புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும். அன்றாடம் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

சூரியனில் இருந்து வெளியாகும் UVA கதிர்கள் நீண்ட நாள் விளைவுகளை ஏற்படுத்தும் அதே நேரத்தில், UVB கதிர்களானது உடனடியாக சருமத்தை பாதிக்கிறது. சரும புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதே முகத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் முக்கிய நன்மை ஆகும்.

சூரிய கதிர்களுக்கு நேரடியாக நமது சருமத்தை வெளிப்படுத்துவது மங்கு, திட்டுக்கள் (ஹைப்பர்பிக்மெண்டேஷன்) போன்றவற்றை ஏற்படுத்தும். இது போன்ற சரும பிரச்சினைகளில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க விரும்பினால் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

உங்கள் சருமத்தை நீண்ட நாட்கள் சூரிய கதிர்களுக்கு வெளிப்படுத்துவது முன்கூட்டிய வயதான அறிகுறிகளை உண்டாக்கும். அதோடு இது கிரோஸ் ஃபீட், சுருக்கங்கள், கொலாஜன் இழப்பு போன்றவற்றையும் உண்டாக்கலாம். முகத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது இது போன்ற பிரச்சனைகளுக்கு எதிரான ஒரு தடுப்பாக செயல்படுகிறது. இதனால் உங்கள் சருமம் நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்கும்.

சன்ஸ்கிரீன் பயன்பாடு சருமத்தின் முக்கியமான புரதங்களான கொலாஜன், கெரட்டின் மற்றும் எலாஸ்டின் போன்றவை வெளியேறாமல் பார்த்து கொள்கிறது. ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்திற்கு இந்த புரதங்கள் மிகவும் அவசியம். UV கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கவும், தேவையான புரதங்களை தக்க வைத்து கொள்ளவும் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு டைட்டானியம் ஆக்சைடு நிறைந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

சன்பர்ன் சருமத்தின் அடுக்கை மெலிந்து போகச் செய்யும். இதனால் தோல் உரிதல், வீக்கம், சிவத்தல் மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு நீங்கள் ஆளாகலாம். நீங்கள் வெளியே செல்ல திட்டமிட்டு இருந்தால், குறைந்தது SPF 30 கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள். அதிக அளவிலான நன்மைகளைப் பெற மினரல் சார்ந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment