அல்போன்சா, அம்ரபாலி, பங்கன பள்ளி, ருமானி என மாம்பழங்களில் பல வகைகள் உள்ளன. மாம்பழங்களின் ருசி அருமையான இனிப்பு என்றாலும், மாங்காயையும் பெரும்பாலானோர் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பச்சை அல்லது பழுக்காத மாம்பழங்களான மாங்காய்களின் புளிப்பு மற்றும் தனித்துவமான சுவை சாப்பிடுவோருக்கு மிகவும் அலாதி அனுபவத்தை தருகின்றன. மாங்காயை பொடியாக நறுக்கி உப்பு தண்ணீரில் ஊற வைத்து சுவைக்கலாம். பல வீடுகளில் பச்சை மாங்காய் ஊறுகாய் முக்கியமான சைடிஷாக இருக்கிறது. மாங்காயை மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையோ அருமை.! எனவே மாங்காயை நினைத்தாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும்.!
மாம்பழங்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.. இந்த கோடையில் பச்சை மாங்காய்களை உட்கொள்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் இங்கே:
மாம்பழங்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.. இந்த கோடையில் பச்சை மாங்காய்களை உட்கொள்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் இங்கே:
இதய ஆரோக்கியம் : மாங்காய்களில் காணப்படும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை சீரான ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. மாங்காயில் இருக்கும் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் ரத்த நாளங்களை தளர்த்த உதவுகின்றன. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதிக சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டான மாங்கிஃபெரின் (Mangiferin) மாங்காயில் ஏராளமாக உள்ளது.
ஜீரணத்தை எளிதாக்குகிறது : மாங்காய்களில் amylases எனப்படும் செரிமான நொதிகள் உள்ளன, இவை கடினமான உணவு மூலக்கூறுகளை உடைக்க உதவுகின்றன. இதனால் அவை எளிதில் உறிஞ்சப்படுகின்றன. தவிர amylases என்சைம்கள் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களை மால்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகளாகவும் மாற்றுகிறது.
கொலஸ்ட்ரால் கன்ட்ரோல் : நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள டீட்டாக்ஸிஃபிகேஷன் மிகவும் முக்கியமானது. பச்சை மாங்காய்களில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகின்றன. கூடுதலாக மாங்காய்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
எடையை குறைக்க உதவுகிறது : மாங்காய்களில் குறைவான கலோரிகள் இருப்பதால் எடை இழப்பை இலக்காக கொண்டவர்களுக்கு உதவும். மேலும் மாங்காய்களில் ஃபேட் , கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதாலும் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. மாங்காய்களில் காணப்படும் C, K, A, B6 மற்றும் ஃபோலேட் உட்பட பல முக்கிய வைட்டமின்ஸ்கள் சிகிச்சை நன்மைகள் (therapeutic advantages) நிறைந்தவை. எனவே செரிமான பிரச்சனைகளை சரி செய்ய, பார்வையை மேம்படுத்த, உடல் எடையை குறைக்க ஆயுர்வேதத்தில் மாங்காய்கள் அடிக்கடி எடுக்க பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment