உலகில் ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு WHO (world health organization) கூறுகிறது. டிப்ரஷன் போன்ற மன உளைச்சல்களும், மன கோளாறுகளும் தற்கொலைக்கு வழிவகுக்கிறது.WHO-வின் இந்த தரவுகள் கவலையளிக்க கூடியவையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ரஞ்சன் பட்டாச்சார்யா, நம் மன ஆரோக்கியத்தை பேண சுய-கவனிப்பு செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை ஷேர் செய்து உள்ளார். மேலும் ஒருவர் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வாழ்க்கையில் பாசிட்டிவாக இருப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது. வாழ்க்கையில் திருப்தி உணர்வை பெற மற்றும் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள பொதுவாக இன்னும் நிறைய செய்ய வேண்டும். உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் நிபுணர் பகிர்ந்துள்ள டிப்ஸ்கள் இங்கே.
வழக்கமான ஒர்கவுட்ஸ் : தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஒர்கவுட்ஸ் செய்வது உடல் Endorphin ஹார்மோனை வெளியிட உதவுகிறது. இந்த ஹார்மோன் உடலை மற்றும் மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்த ஹார்மோன் நாள் முழுவதும் மோட்டிவேட்டாக இருக்க சக்தியளிக்கிறது.
டயட் : ஃபிரெஷ்ஷான பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் கூடிய ஆரோக்கியமான, சத்தான மற்றும் சீரான உணவுகள் அடங்கிய டயட் நரம்புகளை புத்துயி பெற செய்கிறது. மன அழுத்தத்தால் தூண்டப்படும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தின் அபாயத்தை ஆரோக்கியமான டயட் குறைக்கிறது.
போதுமான தூக்கம் : ஒரு நாளைக்கு சராசரியாக 6-8 மணி நேரம் போதுமான தூக்கம் இருக்க வேண்டும். இதற்கு தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் டிவி, லேப்டாப்,ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும்.
மெடிட்டேஷன் : ரிலாக்சேஷன் எக்ஸ்ஸர்சைஸ், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மற்றும் ஜேக்கப்சனின் முற்போக்கான தசை தளர்வு (JPMR) உள்ளிட்ட பயிற்சிகளை தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் செய்வதை இலக்காக கொள்ளுங்கள்.
பொழுதுபோக்குகள் : உங்களுக்கு பிடித்த மியூசிக் அல்லது பாடல்களை கேட்பது, பாட்டு பாடுவது, பிடித்த விளையாட்டுகளை விளையாடுவது உள்ளிட்டவற்றிற் வழக்கமான அடிப்படையில் மேற்கொள்ளலாம்.
பிடித்தவர்களுடன் பேசுங்கள் : உங்களுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் நம்பகமான நண்பர்கள் அல்லது நபர்களை சந்தித்து நேருக்கு நேர் பேசுவது அல்லது ஆடியோ-வீடியோ கால்ஸ்கள் மூலம் பேசுவது உங்களது மனதை உற்சாகமாக வைக்க உதவும் வழிகள்.
பார்ப்பது, கேட்பது, சுவைப்பது மற்றும் நுகர்வது என உங்களை சுற்றியுள்ள உலகில் கவனம் செலுத்துதல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
உங்களை நீங்களே மதிக்க கற்று கொள்ளுங்கள். எப்போது பார்த்தாலும் சிடுசிடுவென்று இருப்பது மற்றும் சுயவிமர்சனத்தை தவிர்க்கவும்.
உங்கள் மனதை அடிமைப்படுத்தும் எந்த ஒரு தேவையற்ற விஷயங்களுக்கும் மற்றும் போதை பொருட்களுக்கும் நோ சொல்லுங்கள்.
உங்கள் லிமிட் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒரு வரம்பிற்குள் செட் செய்து கொள்ளுங்கள். அந்த லிமிட்டை தாண்டி செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டாயப்படுத்தி உடல் மற்றும் மன ரீதியாக சிரமப்படாதீர்கள்.
இதற்கிடையே Fittr and INFS இணை நிறுவனரும், இயக்குனருமான பாலகிருஷ்ணா ரெட்டி பேசுகையில், சுய பாதுகாப்பு என்பது ஒரு ஆடம்பரம் அல்ல, ஆனால் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிக்க அவசியமான ஒன்று. உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், சுய-கவனிப்பை பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை எளிதாக, நிதானமாக சமாளிக்க உதவும். ஒரு பயனுள்ள self-care ரொட்டீனை வழக்கத்தை உருவாக்க படிப்படியான நடைமுறைகளை உருவாக்குவது அவசியம். எல்லாவற்றையும் சரியாக செய்ய உங்கள் மீது நீங்களே அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள் என்கிறார்.
No comments:
Post a Comment