TNPSC Jobs: ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்... ஏதேனும் டிகிரி இருந்தால் போதும்! - Agri Info

Adding Green to your Life

April 12, 2023

TNPSC Jobs: ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்... ஏதேனும் டிகிரி இருந்தால் போதும்!

 TNPSC Recruitment: தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்த துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை: உதவி சிறை அலுவலர்: ஆண்கள்(54), பெண்கள் (5)

கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023  அன்று 18 -32  வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.

சம்பளம்: ரூ. 35,400 முதல் 1,30,400 வரை சம்பளம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது (Level-11)

தேர்வு முறை:   எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட  ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டம்: எழுத்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I-ல் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் கூடிய மாநில நிர்வாகம், சமூக பொருளாதார பிரச்னைகள், தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள், மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில், தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  அதிகாரப்பூர்வமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment