பியூட்டி பார்லர் தொடங்கலாம் என திட்டமிடுகிறீர்களா..? உங்களுக்கான A to Z கைட்லைன்..! - Agri Info

Adding Green to your Life

April 14, 2023

பியூட்டி பார்லர் தொடங்கலாம் என திட்டமிடுகிறீர்களா..? உங்களுக்கான A to Z கைட்லைன்..!

 பியூட்டி பார்லர் தொடங்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால், உங்களிடம் இருக்கும் நிதி, அழகு நிலையத்தின் மாதாந்திர வாடகை, தேவையான பொருட்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அழகு நிலையத்தின் மாதாந்திர வருவாய் போன்ற சில முக்கியமான விவரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இதில் பலரும் பல விதமான வேலை அல்லது வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் விரும்பி ஈடுபடும் ஒரு வகையான வணிகம் தான் பியூட்டி பார்லர். முன்பெல்லாம் பியூட்டி பார்லர் பணக்காரர்கள் அல்லது ஆடம்பரமாக வாழ்பவர்கள் பயன்படுத்தும் ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று இது பட்டித் தொட்டி எங்கும் பிரபலமடைந்து வருகிறது. நீங்கள் ஒரு பியூட்டி பார்லரைத் தொடங்குவதில் ஆர்வமாக இருந்தீர்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நீங்கள் பியூட்டி பார்லர் ஆரம்பிக்க விரும்பினால், முதலில் அதற்கு நீங்கள் ஒரு திடமான வணிகத் திட்டத்தை வகுக்க வேண்டும். இது உங்கள் நிறுவனத்தைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை உங்களுக்கு கொடுக்கும். இதற்கு நீங்கள் ஆராய்ச்சி செய் வேண்டும். அதோடு, மற்ற அல்லது பிரபலமான அழகு நிலையங்களின் செயல்பாட்டு சூழலை பகுப்பாய்வு செய்ய வேண்டும். கூடுதலாக, உங்களுக்கு போட்டியாக இருக்கக் கூடிய பியொட்டி பார்லர்கள் என்னென்ன சேவை வழங்குகிறார்கள், அதன் விலை என்ன என்பது போன்ற தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய இந்தத் திட்டத்தில், உங்களிடம் இருக்கும் நிதி, மாதாந்திர வாடகை, தேவையான பொருட்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அழகு நிலையத்தின் மூலம் பெறக்கூடிய மாதாந்திர வருவாய் போன்ற சில முக்கியமான விவரங்களையும் சேர்க்க வேண்டும். பொதுவாக பியூட்டி பார்லர் கொண்டு ஒருவர் மாதத்திற்கு ₹6000 முதல் ₹50,000 வரை ஈட்டலாம்.

சிறு அழகு நிலையங்கள் முதல் மிகப் பிரம்மாண்டமான அழகு நிலையங்கள் வரை அவரவர் இருப்புக்கு ஏற்றவாறு இடத்தை தேர்வு செய்து ஆரம்பிக்கலாம். ஆனால், இது தொடர்பாக, அதன் உரிமையாளர் கட்டமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியம். சுதந்திரமான அழகு நிலையங்கள் தான் தற்போது உரிமையமைப்பின் மிகவும் பொதுவான வகையாக உள்ளது. ஒரு சுயாதீன தொழிலதிபர் தாங்களாகவே ஒரு பியூட்டி பார்லரைத் தொடங்கலாம் அல்லது நடத்தலாம். இதற்கு மிகக் குறைந்த ஆரம்ப முதலீடு போதும். அதோடு இதில் அன்றாட செயல்பாட்டு செலவுகளையும் எளிதில் சமாளிக்கலாம்.

அடுத்து நீங்கள் அழகு நிலையத்திற்கு எந்த இடத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பது முக்கியம். நிறைய வாடிக்கையாளர்கள் உங்கள் நிலையத்தைத் தேடி வரும் வகையில் ஒரு இடத்தை தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக நிறைய பேர் வசிக்கும் ஒரு இடம் அல்லது மார்க்கெட் பகுதிகள் இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கூடுதலாக, மக்கள் உங்கள் இடத்திற்கு எளிதில் வரும் வகையில் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையம் போன்றவற்றிற்கு அருகாமையில், இலவச பார்க்கிங் வசதியுடன் ஒரு இடம் கிடைத்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

அதே சமயம் நீங்கள் மிகவும் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ கட்டணம் வசூலிக்கக் கூடாது. நீங்கள் அளிக்கும் சேவைக்கு ஏற்ற கட்டணம் வசூலிக்க வேண்டும், அதே சமயம் சேவையின் தரத்தை ஒரு போதும் குறைத்து விடக் கூடாது. நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் வருவாயை அதிகரிக்க நல்ல தரமான அழகு சாதனப் பொருட்களையும் நீங்கள் விற்பனை செய்யலாம்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டாலே போதும், உங்கள் பியூட்டி பார்லர் சிறப்பாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment