அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக(Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களை (Direct Agents) ஈடுபடுத்த இருப்பதாக சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ( Chennai City Central Division) ) தெரிவித்துள்ளார்.
கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை
பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதே சமயம், இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
விருப்பமுள்ளவர்கள் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும்.
நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (National Savings Certificate (NSC)/KisanVikasPatra (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.
இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இது, ஆள் சேர்க்கை அறிவிப்பு கிடையாது.
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment