தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – ஜூன் 10 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
உதவித்தொகை விண்ணப்பம்:
தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனிற்காக ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன மனுதாரர்களுக்கும், மாற்று திறனாளி பிரிவில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள இளைஞர்களுக்கும் உதவி தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத பொது பிரிவினருக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான வயது வரம்பு பொது பிரிவினர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயது க்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த உதவித்தொகை பெற குடும்ப வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது இணையதளத்தில் இருந்தோ படிவத்தை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெற 2023-24 ஆம் ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணங்களை ஜூன் 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Click here for latest employment news
Click here to join WhatsApp group for Daily employment news
Click here for latest employment news
No comments:
Post a Comment