ஃபிரிட்ஜில் வைத்தால் பொருட்கள் கெட்டுப் போகாது என்றுதான் நாம் நினைத்திருப்போம். ஆனால் சில பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்ககூடாது. எவையெல்லாம் வைக்க கூடாது என்ற பட்டியல் இதோ….
பிரெட் : இதை சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். பிரெட்டை தயவுசெய்து ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள். அப்படி வைதால் அவை கெட்டுப் போகும் வாய்ப்புள்ளதோடு சாப்பிட முடியாதளவிற்கு வறண்டு விடும். ஆகவே சமையலறையில் மற்ற பொருட்களை வைத்துள்ள அலமாரியிலேயே இதையும் வைத்திருங்கள்.
உருளைக் கிழங்கு: கடையிலிருந்து வாங்கி வந்து, அதை அப்படியே கூடையில் வைத்தாலே போதும். இதை தனியாக பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உருளைக்கிழங்கை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைத்து விடாதீர்கள். குளிரூட்டப்பட்ட இடத்தில் வைத்திருக்கும் போது, இதிலிருக்கும் கார்போஹைடரேட்ஸ் – மாவுச்சத்து – தன்மை மாற்றம் அடைகிறது. இதனால் சமைக்கும் போது உருளைக்கிழங்கின் சுவை மாறி இனிப்பாக இருக்கும்.
சாக்லேட் : சாக்லேட்டை ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால் ஒன்றும் ஆகாதுதான். ஆனால் சாக்லேட்டை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, அதை அப்படியே ஃபிரிட்ஜில் மூடாமல் திறந்து வைத்திருந்தால் மற்ற உணவுகளின் சுவையை அவை உள்வாங்கிவிடும். இதன் காரணமாக சாக்லேட்டின் தன்மை மாறிவிடும். இதை சாப்பிடும் போது உங்களுக்கு சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்று வலி ஏற்படக் கூடும். சில சமயங்களில் வயிற்றுப்போக்கு கூட ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் சாக்லேட்டை திறந்தபடி ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்.
மூலிகைகள் : துளசி, ரோஸ்மேரி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்தால் வாடிவிடும். இதை உங்கள் சமையலறையில் சூரிய ஒளி நேரடியாக படாத இடத்தில் வைத்தாலே போதுமானது. சிறிய கிளாஸ் ஒன்றில் கொஞ்சமாக தண்ணீர் நிரப்பி அதில் துளசியையும் ரோஸ் மேரி இலையையும் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தேன் : பிரிட்ஜில் தேனை வைத்தால், அதன் நறுமனத்தையும் சுவையையும் இழந்து விடும். ஒரு பாட்டிலில் தேனை ஊற்றி வைத்து நன்றாக மூடி, அதை இருட்டான இடத்தில் வைத்தாலே போதும்.
வெள்ளரிக்காய் : வெள்ளரியை ஃபிரிட்ஜில் வைத்தால் சுருங்கிப் போய்விடும். ஃபிரிட்ஜில் வைப்பதால் இருந்தாக நன்றாக மூடி வைக்கவும்.
அவகோடா : முழுதாக பழுக்காத அவகோடாவை பிரிட்ஜில் வைத்தால் அவை ஒருபோதும் பழுக்காது. ஆகையால் அதை சமையலறையில் உள்ள கூடையில் வைத்தாலே போதும்.
பூண்டு : ஃபிரிட்ஜின் உள்ளே ஈரமாக இருப்பதால், பூண்டை உள்ளே வைத்தால் அவை சுலபமாக வளர்ந்து விட வாய்ப்புள்ளது. அதுவும் நீண்ட காலம் ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் அவை ரப்பர் போன்று ஆகிவிடும். ஆகையால் அதை அப்படியே திறந்தவெளியில் வைத்தாலே நன்றாக பயன்படுத்தலாம்.
காஃபி : காஃபியை ஃபிரிட்ஜில் வைத்தால், அருகிலுள்ள பொருட்களின் சுவையை அது உள்வாங்கிவிடும். இதனால் நீங்கள் காஃபியை குடிக்கும் போது வேறு சுவையை கொண்டிருக்கும். அதனால் காஃபியை ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்.
வெங்காயம் : வெங்காயத்தை நறுக்கியதும் அதை ஃபிரிட்ஜில் வைக்காமல் சமையலறையிலே வைத்திருங்கள். ஃபிரிட்ஜில் வைக்கும் போது வெங்காயத்தின் வடிவம் மாறுவதோடு கொட்டுப்போகவும் வாய்ப்புள்ளது. ஃபிரிட்ஜின் உள்ளே குளிராகவும் ஈரமாகவும் இருப்பதால் வெங்காயத்தை உள்ளே வைத்தால் அவை வளரத் தொடங்கிவிடும்.
குடை மிளகாய் : சுவைக்காகவும் இதன் மொறுமொறுப்பிற்காகவும் குடை மிளகாயை வாங்கியிருப்பீர்கள். ஆனால் இதை ஃபிரிட்ஜில் வைத்தால் சுருங்கிப் போய்விடும்.
No comments:
Post a Comment