மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.16000 சம்பளம்! முழு விவரம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிக்கான முழு விவரங்களை பற்றி பார்க்கலாம்
வேலைவாய்ப்பு அறிவிப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் project assistant பணியில் ஒரு இடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியில் சேர கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் குறித்த முழு விவரம் வெளியாகி இருக்கிறது
கல்வித்தகுதி
இந்த பணிக்கு கல்வித்தகுதியாக M.Sc. உயிர்வேதியியல்/ வாழ்வியல் அதனுடைய தொடர்புடைய பாடங்களை படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் NET/ GATE தேர்வு எழுதி இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
MKU வயது வரம்பு
MKUவில் இந்த பணியில் சேர வயது வரம்பு அதிகபட்சம் 30க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
MKU சம்பளம்
இந்த பணியில் தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக ரூ. 16000 மாதம் வழங்கப்படும் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்த பணியில் விண்ணப்பிப்பவர்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
project assistant பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் சுய விவரம் பட்டியலுடன், புகைப்படம் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் subbiah@nrcbsmku.org என்பதில் ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment