Aavin Jobs 2023: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 1
கல்வியறிவு: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும். கணினி செயல்திறன் அறிவு பெற்றிருக்க வேண்டும். கிராமப் புற பால் பண்ணைகளில் பணி செய்ததற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே மாதம் 17ம் தேதி காலை 11 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நேரடி தேர்வு நடைபெறும் இடம்: The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd., K.P.Road,
Nagercoil – 629 003. , Tamil Nadu .
Email : aavinkk@gmail.com
Tel : 04652 - 230356
Fax: 04652-230785 ஆகும்.
இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment