Search

ஜில் ஜில் கூல் கூல்.. கேரளாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 5 சுற்றுலா தலங்கள்!

 கோடைகாலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க கேரளா பக்கம் ட்ரிப் அடிக்கும் மக்கள் சூட்டை குறைத்துக்கொள்ளவும், குளுகுளு யை அனுபவிக்கவும் ஏற்ற கேரளாவின் பிரபல உப்பங்கழி முதல் துறைமுகம் வரையான  5  சிறந்த இடங்களை பற்றி தான் இந்தத் செய்தித் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.


குமரகத்தின் உப்பங்கழி:
கேரள நிலத்தின் பிரபலமான குமரகத்தின் பிரமிக்க வைக்கும் காயல்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளின் அற்புதமான கலவையாகும். தென்னை மரங்களால் சூழப்பட்ட இந்த நீர்வழியாக நீங்கள் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணிக்கலாம். போட் ஹவுஸ் அனுபவத்திற்கும் சரியான இடமாக இருக்கும்.

மூணாறு :
மூணாறு அதன் பரந்து விரிந்த தேயிலை தோட்டங்களுக்கு புகழ்பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றான இது   பசுமையான சூழலால் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தையும் குளுகுளு  உணர்வையும் கொடுக்கும். அதோடு, தேயிலை தொழிற்சாலையில்   தேயிலை இலைகளை பதப்படுத்துவது பற்றி அறிந்து கொள்ளலாம்.

வர்கலா:
வர்கலாவின் கடற்கரைகள் கரடுமுரடான பாறைகள் மற்றும் அழகிய நீர்நிலைகளுக்கு பெயர் பெற்றவை.  வர்கலா கடல் பகுதியில் இப்போது டால்பின்கள் வருகை தந்திருப்பதால் அது கடலில் துள்ளி குதிக்கும்  காட்சிகளை மிஸ் செய்து விடாதீர்கள்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி:   கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அதிரப்பள்ளி, மர வீடுகளுக்கு பிரபலமான ஒரு பகுதி ஆகும். கம்பீரமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் 80 அடிக்கு மேல் இருந்து நீர் கீழே விழுகிறது. இது ஒரு மூடுபனியை போன்ற நீர் திவிலைகளால் ஆன சூழலை உருவாக்குகிறது. நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதிக்குச் சென்று இயற்கையின் அழகை ரசிக்கலாம்

கொச்சி துறைமுகம்:
கொச்சியின் மையத்தில் அமைந்துள்ள  ஃபோர்ட் கொச்சி. ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் இங்குள்ள பல கட்டிடங்கள் போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட பகுதி. இந்த நகரத்தை  நடந்தோ அல்லது சைக்கிளிலோ சுற்றிப் பார்க்கலாம் மற்றும் உள்ளூர் சுவையான உணவுகளை அனுபவிக்கும் போது தனித்துவமான கட்டிடக்கலையைப் பார்த்து வியக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment