தமிழகத்தில் வீட்டுவசதி வாரியத்தில் 50 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசின் வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள 50 சதவீத பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கி இருப்பதாக வீட்டுவசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார்.
பணியிடங்கள் அறிவிப்பு
தமிழக அரசுத் துறைகளில் ஒன்றான வீட்டுவசதி வாரியத்தில் பல பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த நிலையில் இவ்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் 50 சதவீதம் நிரப்பப்பட உள்ளது. அதில் வாரிசு அடிப்படையில் சில பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கி இருப்பதாக அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இதனை நிரப்ப கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்த 138 கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 60 கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய குடியிருப்புகள் இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும் எனவும், சுயநிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இடங்களில் வீட்டு வசதி வாரியம் சார்ப்பில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Click here for latest employment news
No comments:
Post a Comment