ரூ. 50,000/- சம்பளத்தில் ECIL நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது Project Engineer மற்றும் Assistant Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ECIL நிறுவன காலிப்பணியிடங்கள்:
- Project Engineer – 2 பணியிடங்கள்
- Assistant Engineer – 1 பணியிடம்
Engineer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் 60 % மதிப்பெண்களுடன் Project Engineer பதவிக்கு B.Tech. / BE in Electrical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே போல் Assistant Engineer பதவிக்கு Diploma in Electronics / B.Sc. with Maths & Physics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ECIL அனுபவம்:
விண்ணப்பதாரர் கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 அல்லது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ECIL Project Engineer சம்பள விவரம்:
- 1st year – ரூ.40,000/-
- 2nd year – ரூ.45,000/-
- 3rd year – ரூ.50,000/-
- 4th year – ரூ.55,000/
Assistant Engineer சம்பள விவரம்:
- 1st year – ரூ.24,500/-
- 2nd year – ரூ.26,950/-
- 3rd & 4th year – ரூ.30,000/-
விண்ணப்பிக்கும் முறை:
https://www.ecil.co.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11/05/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment