திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் 7 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு இந்து மதத்தைச்சார்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11.05.2023 மாலை வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.
பணி விவரம்
பணி விவரம் | காலிப்பணியிடங்கள் | சம்பளம் |
தட்டச்சர் | 1 | 18,500-58,600 |
உதவி மின்பணியாளர் | 1 | 16,600-52,400 |
காவலர் | 4 | 15,900-50,400 |
பெருக்குபவர் | 1 | 15,900-50,400 |
வயது
விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/25706/1313/document_1.pdf
விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டியவை..
1.பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்று நகல்
2.ஆதார் அட்டை நகல்
3.இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்று நகல்
4.கல்வி சான்று நகல்
5.நன்னடத்தைச்சான்று
6.அனுபவ சான்று நகல்
7.சுயவிலாசமிட்ட ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் 8.உறை ஒன்று.
விண்ணப்பிப்பது எப்படி?
1 விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
2 விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
3 மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகளை இணைக்கவும்.
4 முழுமையான விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிடை வரிசை எண் மற்றும் எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620005
விண்ணப்பிக்க கடைசி நாள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 11.5.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட முகவரியை வந்தடைய வேண்டும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment