பொதுவாகவே நம்மில் பலரும் கொழுப்பு அல்லது காரம் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலும், எண்ணெயில் பொரித்த மற்றும் துரித உணவுகளை உட்கொண்ட பின்னும் , வயிற்றில் அமிலத்தன்மையானது அதிகரித்து அதனால் சில அசோகரிங்களை உணர்ந்து இருக்கலாம். இதனால் சிலருக்கு அடிக்கடி ஏப்பம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம்..
இதைப்பற்றி பேசிய ஊட்டச்சத்து நிபுணரான லவ்நீத் பத்ரா கூறுகையில், சில சமயங்களில் தவறான உணவுகளை உட்கொள்வது மட்டுமல்லாமல் சரியான உணவுகளை உட்கொள்ள தவறுதினாலும் உடலில் அமிலத்தன்மையானது அதிகரிக்கலாம். ஆண்டாசிட்ஸ் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின்றி எடுக்கப்படும் சில மருந்து மாத்திரைகள் ஆகியவற்றினாலும் அமிலத்தன்மையானது அதிகரிக்க கூடும். இது போன்ற சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை அதிகரித்து வாழ்வதன் மூலம் அமிலதன்மையின் அறிகுறிகளை சற்று குறைக்க முடியும்.
அந்த வகையில் குறிப்பாக வெயில் காலங்களில் போது உடலில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையை குறைப்பதற்கு உட்கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து உணவு பொருட்களை பற்றி இப்போது பார்ப்போம்.
அரிசி: வெயில் காலங்களில் போது அரிசி மற்றும் பாஸ்டா போன்ற உணவு வகைகள் நமது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அரிசியானது மிக எளிதாக செரிமானம் செய்யக்கூடிய வகையில் இருக்கும். அதே சமயத்தில் அமிலத்தன்மை ஏற்படுத்துவதையும் இது கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த உதவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தின் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. நமது உடலில் அமிலங்கள் சுரப்பதை சம நிலையில் வைப்பதற்கும் வாழைப்பழம் பெரும் அளவில் உதவுகிறது. இவை மட்டுமின்றி உடலில் சேர்க்கப்படும் உணவுப் பொருட்களை செரிமான மண்டலத்தில் இலகுவாக நகர்த்துவதற்கு உதவி செய்யும் நார்ச்சத்தான பெக்டினும் அதிக அளவில் நிறைந்துள்ளது.
வெள்ளரிக்காய் : ஆல்கலைன் உணவுப் பொருளான வெள்ளரிக்காய், நமது உடலில் உள்ள பி எச் அளவை அதிகரித்து அமிலத்தன்மையை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் அதிக அளவு நீர் நிறைந்துள்ளதாலும் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளதாலும் வெயில் காலங்களில் உண்பதற்கு மிகவும் ஏற்ற உணவாகும்.
சப்ஜா விதைகள்: சப்ஜா விதைகள் இயற்கையாகவே நமது உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றன. மேலும் அமிலதன்மையால் ஏற்படும் நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. நீரில் ஊற வைத்து இவற்றை உட்கொள்ளும்போது உடலின் அமிலத்தன்மை கட்டுப்படுத்தி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது
நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகள்: வேறு காய்கறிகள் என அறியப்படும் நிலத்திற்கு அடியில் விளைவிக்கப்படும் இந்த காய்கறிகளில் ஸ்டார்ச் ஆனது அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு நன்மை தரக்கூடிய கார்போஹைட்ரேடுகள் மற்றும் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து ஆகியவையும் அதிகம் உள்ளன. இவற்றை உண்பதினால் நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படாது.
ஆனால் இவற்றை சமைக்கும் போது அதிக அளவு எண்ணெய் அல்லது காரம் சேர்க்காமல் சமைக்க வேண்டும். இல்லையெனில் இவையும் அமிலத்தன்மையை உண்டாக்கும். உருளைக்கிழங்குகள், கேரட் மற்றும் பீட்ரூட் போன்றவை வேர் காய்கறிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment