பயணத்தைத் திட்டமிடுவது ஜாலியாக இருக்கும். ஆனால் சாமான்களை பேக்கிங் செய்யும் போது தான் கட்டுப்பாடும். தேவையான பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும். பாதுகாக்கவும் வேண்டும் என்ற பல யோசனைகளை இருக்கும். அதற்கு எப்படி சரியாக பேக்கிங் செய்வது, என்ன பேக்கிங் உபகாரங்கள் பயன்படுத்தலாம் என்று சொல்கின்றோம்.
லக்கேஜ் கவர்கள் : சாமான்களை தனித்த வண்ணம் மற்றும் வடிவமைப்புடன் வைத்திருப்பது உங்கள் சாமான்களை எளிதில் அடையாளம் காண உதவும். உங்களிடம் தனித்துவமான லக்கேஜ் இல்லையென்றால், லக்கேஜ் கவர்கள் பயன்படுத்தினால் உங்கள் பையை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதோடு கூடுதல் பாதுகாப்பும் வழங்கும். சூட்கேஸை அழுக்கு, அரிப்பு மற்றும் கீறல்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
கழுத்து தலையணை (Neck Pillow): நீங்கள் ரயில், விமானம் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் கழுத்து நிறைய சிரமங்களைச் சந்திக்கும். எனவே, நீண்ட நேர பயணத்தின் போது நீங்கள் வசதியாக தூங்குவதற்கு கழுத்து தலையணை முக்கியமானது. எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய இந்த இலகுரக தலையணைகள் உங்கள் கழுத்தில் உறுதியாக பொருந்துகிறதா என்பதை மட்டும் பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். இது பயண அலுப்பைக் குறைக்க உதவும்.
தனிப்பயனாக்கப்பட்ட லக்கேஜ் டேக் : ஒரே மாதிரியான பைகள் இருக்கும் போது உங்கள் லக்கேஜ் எது என்பதை திறந்து பார்த்து தேர்வு செய்வது கடினம். அதற்கு பதிலாக தனிப்பயனாக்கப்பட்ட லக்கேஜ் தகை பையோடு இணைத்துக்கொண்டால் எளிதாக இருக்கும். அதேபோல பய் எங்காவது தொலைந்து விட்டால், உங்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்கள் கொண்ட டேக் வைத்து கண்டுபிடித்தவர்கள் உங்களிடம் பொருளை சேர்க்க முடியும்.
லக்கேஜ் எடை கருவி : விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் உங்கள் சாமான்களை வெயிட் பெல்ட்டில் எடைபோடப் போகும் போது, பலர் சந்திக்கும் விஷயம் எடை அளவு தான். விமானத்தில் அனுமதிப்பட்ட எடையை விட கூடுதல் எடை இருந்தால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விமான நிலையத்தில் இது ஒரு பதற்ற சூழலை உருவாக்கும். அதை தவிர்க்க கிளம்பும் முன்பே உங்கள் லக்கேஜ் எடையை சரி பார்த்துக்கொள்ளுங்கள். கூடுதல் எடை இருந்தால் அதற்கான கட்டணத்தையும் தயாராக எடுத்து செல்ல உதவும்.
TSA Lock: நீங்கள் பயணம் செய்யும் போது, மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, சாமான்கள் திருட்டு பயம். பொருட்களை சரியாக பாதுகாப்பது நம் பொறுப்பு. நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் உங்கள் சூட்கேஸ் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக(TSA) பூட்டு உதவும். TSA பூட்டு என்பது அடிப்படையில் ஒரு உலகளாவிய பாதுகாப்பு அமைப்பாகும், இது பயணிகள் தங்கள் சாமான்களைப் பூட்டி வைக்கவும், மதிப்புமிக்க பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் சரிபார்க்க அதிகாரிகளை அனுமதிக்கிறது.
No comments:
Post a Comment