மாதந்தோறும் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை – உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாட்டில் சென்னை சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-05-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Chennai Department காலிப்பணியிடங்கள்:
Research and Documentation – 1 பணியிடம்
Communications and Public Private Partnership – 1 பணியிடம்
என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
சென்னை சமூக பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், முதுகலை முடித்திருக்க வேண்டும். அதாவது,
Research and Documentation – Degree in Social Sciences, Humanities
Communications and Public Private Partnership – Post Graduation in Social Sciences, Humanities, CSR, Visual Communication
சம்பள விவரம்:
மேற்கண்ட தேர்வு செயல் முறையின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் சென்னை சமூக பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tn.gov.in இல் ஆன்லைனில் 25-04-2023 முதல் 15-மே-2023 வரை விண்ணப்பிக்கலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment