கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகர், மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள்:
பதவியின் பெயர் | வயது | கல்வித்தகுதி | ஒப்பந்த ஊதியம் |
மருத்துவ அலுவலர் (Medical Officer ) 2 பதவிகள் | 1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் | MBBS | ரூ.75,000/- |
செவிலியர் (Staff Nurse) 2 பதவிகள் | 1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் | DGNM ( DiplomaIn General NursingMidwife ) | ரூ.14,000/- |
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள்(Multi Purpose hospital worker/ Attender)2 பதவிகள் | 1.07.2023 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் | 8ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | ரூ.6,000 |
மேற்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 11.06.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் மற்றும் திருக்கோயில் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment