நீங்கள் வேலையில் இருக்கிறீர்களா? அப்படியெனில் ஓய்வின் போது PF கணக்கு மூலம் எவ்வளவு தொகை பெற முடியும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
தனியார் துறை ஊழியர்களுக்கு, அவர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் (அடிப்படை சம்பளத்திலிருந்து) பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமே DA பொருந்தும்.
அதோடு நிறுவனமும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 12 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இதில் 8.33 சதவீதம் இபிஎஸ்-க்கு செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும். தற்போதைய EPFO விதிகளின்படி, EPS பங்களிப்புக்கான அடிப்படை சம்பள வரம்பு ரூ. 15 ஆயிரம்.
அதாவது நிறுவனத்தின் தரப்பில் ரூ. 1250 மட்டுமே இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். மீதமுள்ள தொகை PFO கணக்கில் டெபாசிட் செய்யப்படும். உதாரணமாக ரூ. 25 ஆயிரம் அடிப்படை சம்பளம் வாங்கும் ஊழியரின் பிஎஃப் பங்களிப்பு ரூ. 3 ஆயிரமாக இருக்கும்.
நிறுவனத்தின் பங்களிப்பு 8.33 சதவீதம் அதாவது ரூ.2082 இபிஎஸ்க்கு செல்லும். 3.67% EPF கணக்கிற்குச் செல்லும். அதாவது ரூ. 917 EPF கணக்கில் வரவு வைக்கப்படும்.
தற்போதைய பிஎஃப் வட்டி விகிதம் 8.15 சதவீதம். இப்போது ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 25 ஆயிரம் இருந்தால், ஓய்வு பெறும் நேரத்தில் எவ்வளவு கிடைக்கும் என்று பார்ப்போம். பணியாளரின் வயது 25 என வைத்துக் கொண்டால், 58 வயதில் அவருக்கு பி.எஃப் பணம் ரூ. 95 லட்சம் கிடைக்கும்.
அதேபோல, ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 5 சதவிகிதம் அதிகரித்தால், பிஎஃப் கணக்கில் மொத்த ஓய்வூதியம் ரூ. 1.9 கோடி இருக்கும். அதே வேளையில் ஊழியருக்கு 30 வயதென்றால், 58 வயதில் ஓய்வு பெறும் போது, பிஎஃப் கணக்கில் ரூ. 61 லட்சம் இருக்கும். அடிப்படை சம்பளம் ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்தால், அவருக்கு ரூ. 1.1 கோடி கிடைக்கும்.
ஊழியர் 35 வயதானவர் என்றால் 58 வயதில் அவருக்கு ரூ. 39 லட்சம் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அடிப்படை சம்பளம் 5 சதவீதம் அதிகரித்தால், இறுதியில் ரூ. 69 லட்சம் பெறலாம்.
No comments:
Post a Comment