12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் வணிகவியல் துறையை (Commerce)தேர்ந்தெடுத்து படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகளை பெற முடியும்என்பதை விளக்குகிறார் கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் துறை தலைவர் முனைவர் ஏஞ்சலின் ஷீபா ஆல்பெர்ட்
“வணிகவியல் துறை என்பது பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதை படித்த பின்னர் கணக்கியல், நிதி நிர்வாகம், வரி தொடர்பான விவரங்கள், தொழில் நிர்வாகம், மற்றும் தொழில் முனைவோராகவும் வர முடியும்.
இதனுடன் சேர்த்துவருமான வரி , தொழில் சட்டம் மற்றும் கம்பெனி சட்டம் ஆகிய பாடங்களையும் மாணவர்கள் பயில்வதன்மூலம் வணிகவியல் பயிலும் மாணவர்கள் நிறைய திறமைகளை பெறுகிறார்கள்.மேலும் பல துறைகளில் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.
மாணவர்கள் இந்த துறையின் மூலம் கணக்காளராக மற்றும் வங்கியில் வங்கி அதிகாரியாக மற்றும் நிதி நிறுவனங்களில் கணக்காளராக, ஆடிட்டராக, வரி ஆலோசகராக, நிதி ஆலோசகராக என பல வேலை வாய்ப்புகள் உள்ளன.
மேலும், மாணவர்கள் தொழில் மேலாண்மை என்னும் பாடமும் பயில்வதால் வேலை கிடைக்காத மாணவர்கள் சொந்த தொழிலை தொடங்கலாம். இல்லையெனில் அவர்கள் ஒரு தொழில் தொடங்கும் ஆலோசகராக பனி புரியலாம்.மேலும் அரசு வேலைக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் தேர்வுகள் எழுதி அக்கௌன்ட் அலுவலராக பணி புரியலாம்.
வணிகவியல் முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த அடிப்படையை அவர்கள் வாழ்வில் அளிக்கிறது. மேலும், பணி புரிய நல்ல அடிப்படையையும் அளிக்கிறது என கூறினார்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment