குழந்தைகளுக்கு 'ஹெல்த் ட்ரிங்ஸ்’கொடுப்பது நல்லதா..? கெட்டதா..? குழந்தைகள் நல மருத்துவரின் பதில்..! - Agri Info

Adding Green to your Life

May 1, 2023

குழந்தைகளுக்கு 'ஹெல்த் ட்ரிங்ஸ்’கொடுப்பது நல்லதா..? கெட்டதா..? குழந்தைகள் நல மருத்துவரின் பதில்..!

 கடந்த பல பல தசாப்தங்களாக பல நிறுவனங்கள் குழந்தைகளுக்கான ஹெல்த் டிரிங்ஸ்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. பல தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் சற்று சிந்தித்து பார்த்தால், ஹெல்த் டிரிங்ஸ் என்ற பெயரில் நம் குழந்தைகளுக்கு நாம் கொடுப்பது சரியான உணவுதானா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக குழந்தைகளுக்கான ஹெல்த் ட்ரிங்ஸ் தாயரிப்புகள் பற்றிய ஒரு முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார் பிரபல Neonatology and Pediatrics டாக்டரான சவுரப் கன்னா.  இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சவுரப் கன்னா, பெரும்பாலான பிராண்டுகள் தங்களது ஹெல்த் டிரிங்ஸ் தயாரிப்புகளை "எனர்ஜி மற்றும் வைட்டமின்ஸ் நிறைந்த ட்ரிங்ஸ்" என்று விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் மறுபுறம் குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் அதிக அளவு சர்க்கரை அவற்றில் பயன்படுத்தப்படுவதை எங்குமே குறிப்பிடவில்லை என்கிறார்.

மேலும் பேசிய சவுரப், பொதுவாக இந்த தயாரிப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. தவிர குழந்தைகள் வலுவாக இருக்கவும், உயரமாக வளரவும் உதவும் என்ற பிம்பத்தை உருவாக்குகின்றன. ஆனால் உண்மையில் எனர்ஜி ட்ரிங்ஸ் மற்றும் இத்தகைய ஹெல்தி ட்ரிங்க்ஸ்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியாது. இதை இம்யூனிசேஷன்/தடுப்பூசிகளால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார்.

குழந்தைகளுக்காக வாங்கும் ட்ரிங்க்ஸ்களில் பெற்றோர்கள் சரிபார்க்க வேண்டியவை...

ஊட்டச்சத்து நிபுணர் அல்லது குழந்தை மருத்துவரின் பரிந்துரையின்படி, உணவு உட்கொள்வதன் மூலம் ஒரு குழந்தைக்கு கிடைக்காத ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து அல்லது குறைபாட்டை பொறுத்து, அந்த குழந்தைக்கு சப்ளிமென்ட்ஸ் (எனர்ஜி பானங்கள் போன்றவை) பரிந்துரைக்கப்படலாம். அப்போது ஒரு பெற்றோர் வாங்க நினைக்கும் ட்ரிங்ஸில் அதிக சுகர் கன்டென்ட் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ப்ரோட்டீன்ஸ், வைட்டமின்ஸ், மினரல்ஸ், டிஹெச்ஏ போன்றவை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் சில பொருட்களாகும். மேலும் இவற்றை குழந்தை உணவின் மூலம் எடுத்து கொள்ளும் நிலை வரும் வரை (சில காலம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் சவுரப் கன்னா.

ஹெல்த் டிரிங்க்ஸை குழந்தைக்கு எப்போது பரிந்துரைக்க வேண்டும்.?

இந்த மாதிரியான சப்ளிமென்ட்ஸ் மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ்களை குறிப்பிட்ட குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை உணவுகள் மூலம் வழங்க முடியாவிட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும். இவற்றை நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது, மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் சவுரப் கன்னா.

இந்த ட்ரிங்க்ஸ்களை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்தால் என்னென்ன சிக்கல்கள் வரலாம்..?

இந்த ட்ரிங்ஸ்களில் நிறைய ப்ராசஸ்டு சுகர்ஸ் உள்ளன. எனவே இவற்றை தொடர்ந்து குழந்தைகள் குடித்தால் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். வரும் 2030-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 27 மில்லியன் குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. உணவை தவிர்த்துவிட்டு, தங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை தவறவிடும் குழந்தைகள், இந்த ட்ரிங்ஸ்களை குடித்த பிறகு ஃபுல்-ஆனதாக உணரலாம். இது அவர்களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். தவிர இந்த ட்ரிங்ஸ்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இனிப்பு மற்றும் சாக்லேட் சுவைகளுக்கு குழந்தைகள் தொடர்ந்து அடிமையாகலாம் என்கிறார்.

மற்றொரு மருத்துவரான எட்வினா ராஜ் கூறுகையில் ஹெல்த் ட்ரிங்க்ஸ் தவிர ஜாம்ஸ், ஸ்ப்ரெட்ஸ், கேண்டீஸ், ஜெல்லிஸ், கேக்ஸ், பிஸ்கட்ஸ், கெட்ச்அப்ஸ் போன்றவை சர்க்கரையின் ஆதாரங்களாகும். ஒரு குழந்தையின் டயட்டில் இருந்து இவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது, அப்படி செய்தல் அந்த பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். எனவே அவற்றின் நுகர்வை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தலாம் என்றார்.

ஹெல்த் ட்ரிங்க்ஸ் பற்றி குறிப்பிட்ட எட்வினா ராஜ், ஒவ்வொரு ஹெல்த் டிரிங்க்ஸ்களும் கலவையில் வேறுபடுகிறது. இது அவற்றில் உள்ள additives-ன் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது. மேலும் இவை 4 டீஸ்பூன் சப்ளிமென்ட்டில் 12-17 கிராம் வரை கார்போஹைட்ரேட்ஸ்களை கொண்டுள்ளன. இதை பாலில் சேர்க்கும் போது காலை உணவாக உட்கொள்ளும் தானியங்கள் / சப்பாத்தியின் ஒரு serving-க்கு சமம். எனவே ஒரு குழந்தையின் தினசரி உணவைத் திட்டமிடும் போது இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஹெல்த் ட்ரிங்க்ஸ் அதிக எடை மற்றும் வாழ்க்கை முறை நோய்களுக்கானஅபாயத்தை அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

ஆரோக்கிய மாற்று..!

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பொருட்களை விட இயற்கை மூலங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்வது மிகவும் சிறந்தது மற்றும் ஆரோக்கியமான மாற்றாக இருக்கும் என்கிறார் டாக்டர் கன்னா. உதாரணமாக பெற்றோர்கள் வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்கு மேங்கோ ஷேக் அல்லது வாழைப்பழ ஷேக் செய்து கொடுக்கலாம், இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என பரிந்துரைக்கிறார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment