இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 291 கிரேட்-பி (Grade- B) அலுவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கல்வித் தகுதி: Officers in Grade 'B' (DR) - (General) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் விவரம்:
பதவி | காலியிடங்களின் எண்ணிக்கை | |||||||||
பொதுப் பிரிவினர்(GEN/UR) | பட்டியல் கண்ட சாதிகள்(SC) | பட்டியல் பழங்குடியினர் (ST) | இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) | பொருளாதார இடஒதுக்கீடு பிரிவினர் | மொத்தம் | PwBD Category# | ||||
A | B | C | D | |||||||
1. Officers in Grade ‘B’(DR)- General | 109 | 25 | 17 | 49 | 22 | 222 | 4(2) | 9(7) | 3(1) | 6(4) |
2. Officers in Grade ‘B’(DR)- DEPR | 14 | 4 | 6(4) | 11 | 3 | 38 | - | 1(1) | 2(1) | 2(1) |
3. Officers in Grade ‘B’(DR)- DSIM | 9 | 8(5) | 5(5) | 6 | 3 | 31 | 2(1) | 1(1) | - | 1(1) |
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மே 01, 2023 அன்றைய தேதி நிலவரப்படி, 21- 30க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும் (கூடுதலாக 18% ஜிஎஸ்டி வரி). பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத் திறனாளி விண்ணப்பித்தாரர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (www.rbi.org.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09-06-2023 (23:00). ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை, எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து மேலும் தெளிவு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Click here for latest employment news
No comments:
Post a Comment