ஈரோடு: கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும், 10ல் துவங்குகிறது.
ஜூன் 13 வரை 30 நாட்கள் நடக்கிறது.பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும் பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுவர்.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சியில் சேர முன் பதிவு அவசியம். ஈரோடு கொல்லம்பாளையம், பைபாஸ் ரோடு ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேர விரும்புவோர், 8778323213, 7200650604, 0424 - 2400338 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment