எப்பவும் வேலை வேலைன்னு இருக்காம உங்களையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க..! - Agri Info

Adding Green to your Life

May 16, 2023

எப்பவும் வேலை வேலைன்னு இருக்காம உங்களையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க..!

 எப்பொழுதும் வீடு, அலுவலகம், குழந்தைகள், கணவன் என்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களை பார்த்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை காட்டிலும் தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பெரும்பாலான பெண்கள் இந்த தவறை தான் செய்கிறார்கள். நேரத்திற்கு சாப்பிடாமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் ஏனோ தானோ என்று தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் கேடு விளைவிக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்களின் உடலைக் காட்டிலும் பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஒரு வேலை நீங்களும் எல்லா நேரமும் பிசியாக இருந்து, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாத ஒரு பெண்ணாக இருந்தால் இந்த பதிவில் உங்களுக்கான ஒரு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ளலாம்.

உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது அல்லது போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது பலவிதமான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற உடல்நல பிரச்சனைகளில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய எட்டு விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு அவர்களுக்கு சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு அவசியம் தேவை. பெண்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளை கவனித்து ஆரோக்கியமாக இருக்க கட்டாயமாக ஒரு சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.

முதலில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க பழகிக் கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
தினமும் கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள். ஒவ்வொரு பெண்ணும் தினமும் குறைந்தபட்சம் இரண்டு கால்சியம் நிறைந்த உணவுகளையாவது சாப்பிடுவது அவசியம்.
உங்கள் உணவுகளில் எலுமிச்சைகளை சேர்க்க முயற்சி செய்யுங்கள். எலுமிச்சை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
முந்தைய நாள் இரவு தூங்கும் பொழுது நான்கைந்து பாதாம் பருப்புகளை ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் பாதாமை தோல் உரித்து அதனை சாப்பிடவும். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.
தினமும் முளைகட்டிய பயிர்களை சாப்பிடும் பழக்கத்திற்கு வாருங்கள்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகவே முடிந்தவரை உணவுகளை பிரித்து சிறிய அளவுகளாக சாப்பிடவும்.
உணவுகளை தவிர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சிற்றுண்டிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிற்றுண்டிகள் பொறுத்தவரை ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பழ வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் ஆகும். மேலும் உணவுகளை தவிர்ப்பது முற்றிலுமாக தவறு ஒருபோதும் அதனை செய்ய வேண்டாம்.
உங்கள் வேலை மற்றும் வாழ்க்கையாகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையை உருவாக்க கற்றுக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தத்தை நிர்வகிக்க தெரிந்து கொள்ளுங்கள். யோகா, தியானம், ஆடல், நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வது உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
உடற்பயிற்சி செய்வதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். இதனை தவறாமல் தினந்தோறும் செய்தல் வேண்டும்.



 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment