வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி டீடாக்ஸ் வாட்டர் கேள்விப்பட்டிருக்கீங்களா..? பல நன்மைகள் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..! - Agri Info

Adding Green to your Life

May 23, 2023

வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி டீடாக்ஸ் வாட்டர் கேள்விப்பட்டிருக்கீங்களா..? பல நன்மைகள் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

 ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள் அல்லது மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் டீடாக்ஸ் வாட்டர் (Detox Water), நம் உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றி வெளியேற்ற உதவுகிறது.

பொதுவாக டீடாக்ஸ் வாட்டர் என்பது அடிப்படையில் ஒருவரது சுவை மற்றும் விருப்பங்களை பொறுத்து பல பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நற்குணங்கள் அடங்கிய நீர் ஆகும். டீடாக்ஸ் வாட்டர் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது என நம்பப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்போர் மத்தியில் டீடாக்ஸ் வாட்டர் பிரபலமாக உள்ளது.

சமீபத்தில் பிரபலமாகி வரும் டீடாக்ஸ் வாட்டர் ரெசிபியாக இருக்கிறது Cucumber-Lemon-Ginger (வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி) வாட்டர். கூடுதல் கலோரிகளின்றி டீடாக்ஸ் நன்மைகளுடன் வருகிறது இந்த ரெசிபி. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நிதி குப்தா தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில், டீடாக்ஸ் வாட்டரானது செரிமானத்தோடு நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பொதுவாக வெள்ளரி, எலுமிச்சை, புதினா, இஞ்சி மற்றும் பெர்ரி போன்ற பொருட்களை தண்ணீரில் மிக்ஸ் செய்வதன் மூலம் டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கூற்றுப்படி எலுமிச்சை, இஞ்சியுடன் சேர்த்து வெள்ளரியையும் பயன்படுத்தி தயார் செய்யப்படும் Cucumber-Lemon-Ginger டீடாக்ஸ் வாட்டர் நம்மை புத்துணர்ச்சியாக வைக்க உதவுவதோடு ஆரோக்கியமான பானமாக அமைகிறது. இந்த டீடாக்ஸ் வாட்டரின் சில நன்மைகளை பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதன்படி.. வெள்ளரி டீடாக்ஸ் வாட்டரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன மற்றும் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களின் சிறந்த ஆதாரமாகவும் வெள்ளரி உள்ளது.

வெள்ளரி டீடாக்ஸ் வாட்டரை பருகுவது செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறவும் உதவும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் மற்றும் இதில் நேச்சுரல் டீடாக்ஸிஃபையிங் பண்புகள் உள்ளன.

சரி, இந்த ஆரோக்கியமான Cucumber-Lemon-Ginger டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்க தேவையான பொருட்கள் என்னவென்பதை கீழே பார்க்கலாம்.

மீடியம் சைஸ் வெள்ளரி - 1, விதை நீக்கப்பட்ட லெமன் - 1, இஞ்சி - 1 பீஸ், புதினா இலைகள் - 10, சியா விதைகள் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 லிட்டர், ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு

டீடாக்ஸ் பானங்கள் உண்மையில் ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு பதிலளித்த இயற்கை மருத்துவர் டாக்டர் சந்தோஷ் பாண்டே, நம் உடலில் தேங்கும் நச்சுகளை வெளியேற்ற போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதில் ஒருவர் அதில் தனக்கு பிடித்த சுவையான பொருட்களை சேர்ப்பதன் மூலம் ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்ட அளவை எளிதாக பருக முடியும். எனவே டீடாக்ஸ் வாட்டர் என குறிப்பிடப்படும் இன்ஃப்யூஸ்ட் வாட்டர் (Infused water), கூடுதல் கலோரிகள் இன்றி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையை சேர்க்க சிறந்த வழி என்கிறார் சந்தோஷ் பாண்டே. வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி சேர்க்கப்பட்ட தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு சிறந்த டீடாக்ஸ் வாட்டராகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த டீடாக்ஸ் வாட்டரில் சேர்க்கப்படும் பொருட்கள் பற்றி கூறுகையில், வெள்ளரிகள் அவற்றின் ஹைட்ரேட்டிங் பண்புகளுக்காக பெயர் பெற்றவை, அதே நேரம் எலுமிச்சை சாறு நச்சுத்தன்மையை நீக்குவதற்கு சிறந்தது. ஏனெனில் இது கல்லீரலை simulates செய்கிறது மற்றும் பசியைக் குறைக்கும் ஒரு வகை நார்ச்சத்தான Pectin-ஐ கொண்டுள்ளது. இஞ்சி ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாகும். எனவே தினசரி எலுமிச்சை, இஞ்சி மற்றும் வெள்ளரி கலந்த தண்ணீரை குடிப்பது ஆரோக்கியமானது. இந்த அற்புத ஆர்கானிக் உணவுகளை தினமும் எடுப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் முழு உடல் அமைப்பையும் சுத்தப்படுத்த உதவுகிறது என்றார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment