ஏற்றுமதி தொழிலில் சாதிக்க வேண்டுமா? தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம் இதோ - Agri Info

Adding Green to your Life

May 26, 2023

ஏற்றுமதி தொழிலில் சாதிக்க வேண்டுமா? தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம் இதோ

 இந்தியாவில் தற்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (1 நாள்) பயிற்சியினை வரும் 03:06:2023ம் தேதி (காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை) வழங்க உள்ளது.

Ads by 

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

முகவரி:  தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.

மேலும் இந்த முகாம் குறித்த விவரங்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தின் மின்னஞ்சல் முகவரி : asstd@editn.in | admin@editn.in ஆகும்.

No comments:

Post a Comment