ஒழுங்கற்ற இதயதுடிப்பு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. ஆம் சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் பிரச்சனைகள் அல்லது சில சம்பவங்களினால் இதய துடிப்பு மிக வேகமாக இருக்கும். அதே சமயம் சில நேரங்களில் மிக மெதுவாக இயங்கும். இப்படி மாறி மாறி ஒழுங்கற்ற இதயத்துடிப்பை மருத்துவ உலகில் அரித்மியா (arrhythmia) என்று அழைக்கின்றனர்.
இது குறித்து பிரபல மருத்துவர் ப்ரீதம் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கையில், சாதாரணமாகவே வயது வந்தோருக்கான இதய துடிப்பு வீதம் நிமிடத்திற்கு 60 முதல் 100 துடிக்கிறது. ஆனால் இதய துடிப்பு சற்று மாறும் போது, மயக்கம், மூச்சுத்திணறல் மற்றும் அதிக வியர்வை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதுப்போன்ற பிரச்சனை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை நிச்சயம் விட்டு விட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்
இருந்தப்போதும், சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டாலே, இதயத்தில் பிரச்சனை இருப்பதாக அர்த்தமல்ல. உடலின் வெவ்வேறு செயல்பாடுகளின் போது, இதயத் துடிப்பு வேகமடைவது இயல்பானது. இதேபோல், ஒருவர் ஓய்வெடுக்கும்போது அல்லது தூங்கும்போது, மெதுவாக இதயத் துடிப்பு ஏற்படுவது இயல்பானது.
ஒழுங்கற்ற இதய துடிப்பு உயிருக்கு ஆபத்தானதா? மருத்துவ ரீதியாக சில வகையான அரித்மியாக்கள் அதாவது ஒழுங்கற்ற இதய துடிப்பு பாதிப்பில்லாதவை. இவற்றிற்கு உடனடி சிகிச்சை தேவையில்லை. இருந்தப்போதும் மருத்துவ சோதனை மேற்கொண்ட பின்னர் என்ன வகையான பிரச்சனை உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப நீங்கள் சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அரித்மியாவின் வகைகள்: டாக்டர். கிருஷ்ணமூர்த்தியின் கூற்றுப்படி, பல்வேறு வகையான அரித்மியாக்கள் உள்ளன. இவை ஈசிஜி அல்லது ஹோல்டர் கண்காணிப்பு போன்ற எளிய நோயறிதல் சோதனைகள் மூலம் அடையாளம் காண முடியும். இந்த அரித்மியாக்கள் அப்நார்மல் ரிதம் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சில அசாதாரண தாளங்கள் இதயத்தின் மேல் அறைகளில் உருவாகின்றன, இவை சுப்ரா வென்ட்ரிகுலர் அரித்மியாஸ் என்றும், இதயத்தின் கீழ் அறைகளில் தோன்றுபவை வென்ட்ரிகுலர் அரித்மியா என்றும் அழைக்கப்படுகின்றன.
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? அரித்மியாவை மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்தலாம். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது ஒரு அபாயகரமான பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது இதயத் தடுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். “இதயத் துடிப்பை சரிசெய்வதற்காக இதயத்திற்கு மின் சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் இதயத் துடிப்பைச் சரிசெய்ய பொருத்தப்பட்ட சிறிய சாதனமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏன் ஏற்படுகிறது? தூக்கம், உடல் செயல்பாடுகள் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக இதயத் துடிப்பு மற்றும் இதயத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானவை. ஆனால் மற்ற நேரங்களில், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அல்லது அரித்மியா, ஒரு தீவிர பிரச்சனையாக மாறக்கூடும். எனவே நீங்கள் முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே பல நோய்களின் பாதிப்பை நாம் தவிர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment