நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் பணம் செலவாகிறதா.! உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை மேனேஜ் செய்வது கஷ்டமாக இருக்கிறதா.! இது உங்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல, பலருக்கும் மனஅழுத்தம் மற்றும் கவலையை ஏற்படுத்த கூடிய பிரச்சனையாக இருக்கிறது.
நிதி அழுத்தம் என்பது பலருக்கும் ஏற்படும் மிகவும் பொதுவான அனுபவம். அதிகரிக்கும் கடன், எதிர்பாராத செலவுகள் அல்லது வேலை பாதுகாப்பின்மை என எதுவாக இருந்தாலும் Financial Anxiety என்று சொல்லக் கூடிய நிதி அழுத்தமானது ஒருவரின் மன ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்க்கையிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்த நிதி கவலை ஏற்படும் மனநல பிரச்சனைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தீர்வு இல்லை, ஏனென்றால் இது நபருக்கு நபர் மாறுபட கூடியது.
எனினும் உங்களது அன்றாட வாழ்க்கையில் நிதி சார்ந்த சிக்கல்களை நிர்வகிப்பதற்காக LISSUN-வில் Strategy & Operation தலைவராக இருக்கும் நிபுணர் நிஷாந்த் ஜோஷி பகிர்ந்துள்ள டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
Financial Anxiety -ஐ புரிந்து கொள்வது: நிதி சார்ந்து எழும் கவலையை புரிந்துகொள்ள அதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பீதி, கவலை மற்றும் மன அழுத்தம் உட்பட பல வழிகளில் நிதி கவலை வெளிப்படுகிறது. Financial Anxiety-யை அனுபவிக்கும் நபர்கள் தலைவலி, வயிற்று பிரச்சனைகள் மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ளலாம். தவிர வேலையின்மை, எதிர்பாராத செலவுகள், மோசமான நிதி மேலாண்மை உள்ளிட்டவை நிதி அழுத்தத்திற்கான பொதுவான தூண்டுதல்களாக இருக்கின்றன.
பட்ஜெட் பிளானிங்: அதிர்ஷ்டவசமாக நிதி சார்ந்த கவலைகளை நிர்வகிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிராக்டிக்கல் ஸ்ட்ராடெஜிஸ்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பொதுவான உத்தி பட்ஜெட்டை திட்டமிடுவது மற்றும் அதனை சரியாக பின்பற்றுவதும் ஆகும். இது நீங்கள் செய்யும் செலவுகளை கண்காணிக்க, உங்களுக்கான நிதி நோக்கங்களை திட்டமிட அனுமதிக்கிறது. நிதி மீதான கட்டுப்பாட்டை எடுத்து கொண்டு உங்களது மன அழுத்தத்தை குறைக்கிறது.
நிபுணர்களால் பகிரப்பட்ட சில பொதுவான நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் நிதி திட்டமிடலை துவங்கலாம். Financial counselling -க்கு சென்று நிபுணர்களுடன் கலந்துரையாடுவது உங்கள் நிதி நிலையை பற்றிய சிறந்த புரிதலை உங்களுக்கு வழங்குவதோடு, நிதி முன்னேற்றத்திற்கான உத்திகளை நீங்கள் கற்று கொள்ளலாம்.
Financial planning நிபுணரின் ஆலோசனையை பெறுவது, உங்கள் இலக்குகளுடன் ஒத்துப்போகும் ஒரு முழுமையான ஃபினான்ஷியல் ரோட்மேப்-ஐ உருவாக்குவதில் பயனளிக்கும். மேலும் நிபுணர்கள் கூறும் கடன் ஆலோசனையானது நிலுவையில் உள்ள உங்கள் கடன்களை நேர்த்தியாக நிர்வகிக்கவும் உதவியாக இருக்கும்.
நிபுணர்களின் தலையீடு: சூழல்களை பொறுத்து சில நேரங்களில் உளவியல் நிபுணர்களின் தலையீடு தேவைப்படும் அளவுக்கு நிதி சார்ந்த அச்சம் அதிகரிக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முக்கிய சவாலாக இருக்கும் உண்மையான நிதி நிலையை கருத்தில் கொள்ளாமல் மாறாக நம் வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து அதிக கவலை ஏற்பட கூடும். இப்படி நிதி கவலையை அதிகப்படுத்தும் எந்தவொரு அடிப்படை மனநல கவலைகளையும் கையாள்வதில் உளவியல் சிகிச்சை முக்கியமானதாக இருக்க கூடும். எனவே உளவியல் சிகிச்சை நிபுணரிடம் கவுன்சிலிங் செல்வது பணத்துடனான உறவை மறுவரையறை செய்ய, வாழ்வில் திருப்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த உதவும்.
பிறருடன் தொடர்பு: உங்களை போன்றே நிதி சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுடன் தொடர்புகளை வளர்த்து கொள்வது நிதி கவலையுடன் போராடும் போது உங்களுக்கு உதவியாக இருக்க கூடும். நீங்கள் எதிர்கொள்ளும் நிதி சவால்களை வெற்றிகரமாக சமாளித்து கொண்டிருக்கும் நபருடன் நீங்கள் தொடர்பு கொள்வது உங்களது ஊக்கத்தை அதிகரிக்கும். சவால்களை எதிர்த்து போராடும் போது ஆதரவையும், உதவியையும் தேடுவது பலவீனம் அல்ல மாறாக வலிமையின் அடையாளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment