தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பயிற்சி அறிவிப்பு
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், தாட்கோ மூலமாக நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உதவி குழாய் பழுது நீக்குபவர், இலரக மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர், மருத்துவமனை வார்டுபாய், உதவி சமையலர், வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி , ஆயுதமற்ற பாதுகாவலர், வீட்டுக்காப்பாளர், ஆகிய பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்த பயிற்சியில் 18 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பயிற்சி 10 முதல் 14 நாட்கள் வரை நடைபெறும். மேலும் இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வாங்கப்படும். மேலும் இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த இளைஞர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், தாட்கோ நாகப்பட்டினம் என்ற முகவரியில், 04365-250305 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Click here for latest employment news
No comments:
Post a Comment