உடலுக்கு பல விதமான நன்மைகளை அளிக்கும் ஊட்டச்சத்து நிறைந்து உணவுகளைத் தான் சூப்பர்-ஃபுட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை உணவுகள், பெண்களின் டயட்டில் அவசியமாக சேர்க்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்றாகும் . உடலுக்குத் தேவையான, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் பல்வேறு காம்பவுண்டுகள் ஆகியவை பவர்-ஹவுஸ் உணவுகளாகும். பெர்ரி போன்ற சில சூப்பர்-ஃபுட்ஸில், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த நுண்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும்; பாலக் கீரை, கேல், உள்ளிட்ட கீரை வகைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகளை ஆரோக்கியமாக்கும், மற்றும் உடலுக்கு ஆற்றல் அளிக்கும்.
அடுத்ததாக, கொழுப்பு நிறைந்த சால்மன் போன்ற மீன் உணவுகளில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டை வகைகள், விதைகள் ஆகியவை ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்..பெண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகளின் பட்டியல்.
முட்டைகள்: இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்க்க வேண்டிய பொருள்களில் ஒன்றாக உள்ளது முட்டைகள். இதில் உள்ள புரோட்டீன், ஒமேகா 3 மற்றும் வைட்டமின் ஏ,டி,ஈ மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இதில் உள்ள கொழுப்பு மற்றும் புரதத்தின் ஆதாரங்கள், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தனிஷா பாவா.
அவோகாடோ: இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் பி 6, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இவற்றை பெண்கள் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சருமம் பளபளப்பாகவும், முடி வளர்ச்சிக்கும் பேருதவியாக உள்ளது. அவோகாடோபழத்தில் உள்ள கொழுப்பு சத்துக்கள், உடலில் இரத்த சர்க்கரை அளவை சமநிலையை வைத்திருக்க உதவுகிறது.
சியா விதைகள்: சியா விதைகளில் ஒமேகா 3, இரும்பு, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக உள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனையை மேம்படுத்துகிறது. மேலும் இன்சுலின் அளவை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவையும் உறுதிப்படுத்த உதவியாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
எள்: பொதுவாக பெண்களுக்கு வயதாக வயதாக எலும்புகள் பலவீனமாகிறது. எனவே பெண்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உணவில் எள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் குடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.
நெய் மற்றும் வெண்ணெய்: வெண்ணெய் மற்றும் நெய் இரண்டிலும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது. இவற்றை நீங்கள் எவ்வித தயக்கம் இன்றி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொது குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
முருங்கை: இதில் வைட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, அமினோ அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன்கள் நிரம்பியுள்ளது. இவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக உள்ளது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி6, கே மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றது. செரிமான பிரச்சனையை சரிசெய்வதோடு, கண் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.
பாதாம் வெண்ணெய்: இதில் நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், மூளை வளர்ச்சியை அதிகரிப்பதோடு, நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த மூலமாக உள்ளதால், எல்டிஎல் என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், எச்டிஎல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
குயினோவா: அரிசி, கோதுமைக்கு மாற்றாக இன்றைக்கு மக்களிடம் பிரபலமாகியுள்ளது குயினோவா என்ற சிறுதானியம். இதில் அதிகளவில் புரதசத்துக்கள், கொழுப்பு, கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளதால் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவியாக உள்ளது. மேலும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த குயினோவை சாப்பிடலாம்.
தயிர்: பொதுவாக பாலூட்டும் தாய்மார்கள் மற்றும கர்ப்பிணி பெண்களுக்கு தயிர் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. இதில் லாக்டோஸ் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால் பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுவதோடு, எலும்பு, நரம்பு மண்டலம் மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியத்தை வழங்க உதவியாக உள்ளது.
மாதுளை: பாலிஃபோலோஸ், ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட வைட்டமின் ஏ,சி,ஈ மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது மாதுளை. நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளதால், பெண்கள் இந்த பழங்களைச் சாப்பிடும் போது, அவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. குறிப்பாக கருப்பை ஆரோக்கியம், மாதவிடாயை சீர்ப்படுத்துவது முதல் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது. மேலும் பெண்களுக்கு தோல் மற்ற்றும் முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. குடல் ஆரோக்கியம் மற்றும் மூட்டு வலியை சரியாக்கவும் மாதுளை உதவுகிறது.
No comments:
Post a Comment