உணவின்றி நம்மால் உடல் உழைப்பில் ஈடுபடமுடியாது.
அதேசமயம் அளவுக்கு மீறி நாம் உணவுப்பொருள்களை சாப்பிடும் போது பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது அத்தியாவசிய கடமையாக உள்ளது.
இல்லையென்றால் எடை அதிகரிப்பு முதல் நீண்ட கால சுகாதார பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆம் நீங்கள் அடிக்கடி அதிகமாக சாப்பிடும் போது தேவையில்லாத கொழுப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகம். இதனால் செரிமான செயல்முறை தடைப்பட்டு பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
ஆனால், பிடித்த உணவுகள் என்று வரும் போது, நம்மில் பலர் வயிறு நிரம்பியிருந்தாலும் நிச்சயம் சாப்பிடுவோம். இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா கூறுகையில், “எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் அல்லது எவ்வளவு வயிறு நிரம்பியதாக உணர்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தால் அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடுகிறது. உண்மையில், இந்த பழக்கம் வீக்கம், வாயு, குமட்டல், அதிகப்படியான உடல் கொழுப்பு மற்றும் பல நோய்களின் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும். அதிகப்படியான உணவு உண்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பதை சுகாதார நிபுணர் மேலும் பகிர்ந்து கொள்கிறார்.
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள்:
உடலில் அதிகப்படியான கொழுப்பை சேர்வதை ஊக்குவிக்கும்
பசி ஒழுங்குமுறையை சீர்குலைக்கும்
நோய் அபாயத்தை அதிகரிக்கும்
மூளை செயல்பாட்டை பாதிக்கும்
மந்தமாக உணர வைக்கும்
அதிகப்படியான வாயு மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை நமக்கு ற்படுத்துகிறது.
அதிகமாக சாப்பிடுவதை தடுப்பது எப்படி..?
முன்பே கூறியது போல, பிடித்த உணவுகள் என்று வரும் போது நம்மைக்கட்டுப்படுத்தாமல் அதிகளவில் சாப்பிடுவோம். இந்த நேரத்தில் நீங்கள் மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும். இல்லையென்றால் நம்மை அறியாமலேயே நினைத்த நேரத்தில் சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்போம். ஒருவேளை நீங்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ளுங்கள். இதோடு மெதுவாக சாப்பிடுவதிலும், உணவை நன்றாக மென்று சாப்பிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதிகப்படியான உணவு உண்பது பல்வேறு வியாதிகள் மற்றும் வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க பதப்படுத்தப்பட்ட உணவை குறைவாக உட்கொள்ளவும், உங்கள் போர்ஷன் அளவை (portion sizes) குறைக்கவும், உங்கள் உணவை பெரும்பாலும் சத்தான உணவுகளை அடிப்படையாக கொள்ளவும் வேண்டும் என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
0 Comments:
Post a Comment