நம்மில் பலரும் ஓய்வு இல்லாத வாழ்க்கையை வாழ்கிறோம். சரியாக ஆய்வு எடுக்காமல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல், கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு வேலை வேலை என சம்பாத்தியத்தில் பின் ஓடுகிறோம். நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பலர் உடல்நலம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?... தற்போது நீரழிவு, இதய நோய், சிறுநீரக தோற்று ஆகியவை இளைஞர்களை அதிகமாக பாதிக்கும் நோய்களாக இருக்கிறது. நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகள் தான் நமது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?.
சோர்வு, தூக்கமின்மை, அரிப்பு, முகம் அல்லது கால்களின் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீரில் இரத்தம் போன்றவை சிறுநீரக தொற்றின் அறிகுறிகள் ஆகும். Web MD இன் தகவல்படி, உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைக்க சில உதவிக்குறிப்புகளை உங்களுக்கு கூறுகிறோம். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
அதிகப்படியான மருந்து உட்கொள்வது : அழற்சி எதிர்ப்பு (antibiotics) மருந்துகள் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும். அதே சமயம் ஆண்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை சேதப்படுத்தும். இதில் உள்ள மூலக்கூறுகளின் சப்ளிமெண்ட்ஸ் சிறுநீரகங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால், மருந்துகளை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுங்கள் : உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதே சமயம், கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை உள்ளவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இதனால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதே நேரத்தில், உங்கள் உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை சேர்த்துக்கொள்வது நல்லது.
நிறைய தண்ணீர் குடிக்கவும் : ஏராளமான தண்ணீர் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும். இது நீரிழப்பு, கற்கள் அல்லது சிறுநீரக தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.
தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள் : சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, தினமும் 30-60 நிமிடம் உடற்பயிற்சி செய்யலாம். இதனால், சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்பும் குறையும். இருப்பினும், உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், நிபுணர் ஆலோசனையைப் பெறுங்கள். மேலும், அவ்வப்போது வழக்கமான சோதனைகளைச் செய்ய மறக்காதீர்கள்.
மது பழக்கத்திலிருந்து விலகி இருங்கள் : சிறுநீரக பாதிப்புக்கு புகைபிடித்தல் மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. மது அருந்துவதால் சிறுநீரகம் சரியாக இயங்காது. அதே நேரத்தில், புகைபிடித்தல் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. எனவே, சிறுநீரக நோய்களைத் தடுக்க புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment