சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் தாய்சேய் நல மருத்துவமனையில் 2 வார்டு மேலாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் மே மாதம் எதிர்வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்: வார்டு மேலாளர் (Ward Manager)
காலியிடங்கள் எண்ணிக்கை: 2
மாதச் சம்பளம்: ரூ. 10 ஆயிரம்
கல்வித் தகுதி: கணினி இயக்கம் அறிவுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
நிபந்தனைகள்: இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன.
மேலும், தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குதர் மற்றும் பேராசிரியர்.
மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும்
அரசு தாய் சேய் நல மருத்துவமனை
எழும்பூர் சென்னை -600008.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.05.2023
நிர்ணயிக்கப்பட்ட (26.05.2023) தேதிக்கு பிறகு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment