‘உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு’ என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆம் காலை, மதிய நேரத்தில் சாப்பிட்டவுடன் சிறிய மயக்கத்துடன் கூடிய தூக்கம் நமக்கு வரும். அப்போது ஒரு 5 நிமிடமாவது தூங்காவிட்டால் நாள் முழுவதும் ஏதோ எரிச்சலாக உணர்வோம். இதைத் தான் ஆய்வும் கூறுகிறது. மதிய நேரத்தில் நாம் சிறிது நேரம் தூங்குவது நம்முடைய மனதை நிம்மதியாக்குவதோடு, இளைய தலைமுறையினருக்கு ஞாபக சக்தியையும் அதிகரிக்க உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
மதிய நேர தூக்கம் குறித்த ஆய்வு சொல்வது என்ன….? குறிப்பாக ஸ்பெயின் மற்றும் அனைத்து மெடிட்டரேனியன் நாடுகளிலும் மதிய தூக்கம் என்பது ஒரு பராம்பரியமாக உள்ளது என்கிறது குவாடலஜாரா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள். அலுவலகம் மற்றும் வீடுகளில் இருந்தாலும் மதிய உணவை சாப்பிட்ட பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் என்றும், இது தனிநபர்களின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்கிறது ஆய்வுகள். அதற்காக அதிக நேரம் தூங்கினாலும், உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறது. மேலும் மதிய வேளைகளில் குட்டி தூக்கம் போடுவது, இளைய தலைமுறையினருக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கிறது எனவும் கூறுகிறது. இவ்வாறு தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள், மதிய நேரம் குட்டித் தூக்கத்தை பின்பற்றாதவர்களை விட அதிக வார்த்தைகளை ஞாபத்தில் வைத்திருப்பார்கள் என்று ஆய்வு முடிவுகளில் தெளிவாகி உள்ளது.
தூக்கத்தின் வகைகள்: பொதுவாக பவர் நேப், கேட் தூக்கம் (பூனை தூக்கம்) சியெஸ்டா என தூக்கத்தின் வகைகளை பிரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக 'பவர் நேப்' என்பது தூக்கம் அல்ல. மீண்டும் எழுவதற்கான புத்துணர்வைப் பெறுவதற்கான ஒரு பயிற்சியாகவே கருதப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் கூட தங்களுடைய பணியாளர்களுக்கு பவர்-நேப் முறையை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு பணியாளர்கள் வேலைக்கு நடுவில் குட்டி தூக்கம் போடுவது, நமது மூளையை கூர்மையாகவும், வழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என நம்புகிறது. இதே போன்று காட் தூக்கம் அதாவது பூனை தூக்கம் என்பது நாம் சிறிது நேரம் ஓய்வெடுப்பது போன்றது தான் எப்படி பூனை கண் மூடியிருந்தாலும் விழிப்புடன் உள்ளதோ? அதைப் போன்று தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லாமல் சிறிது மனதை புத்துணர்ச்சியாக்க கூடிய விஷயங்களில் ஒன்றாக இது உள்ளது. இதே போன்று சியெஸ்டாவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
இவ்வாறு தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவது தனிமனிதர்களுக்கு சிக்கலான விஷயமாக அமைகிறது. குறிப்பாக நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. இதோடு மட்டுமின்றி மதிய நேரத்தில் குட்டி தூக்கத்திற்கு பிறகு காபி குடிப்பதும் நல்லது என்கிறது ஆய்வுகள். மதிய உணவிற்கு பிறகு நீங்கள் காபி குடிப்பது உங்களின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றத்தின் சரியான செயல்பாட்டிற்கு பங்களிக்கும் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment