வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..! - Agri Info

Adding Green to your Life

May 1, 2023

வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..!

 தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதில் புரதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது. மறுபுறம், இது நன்மை தரும் பாக்டீரியாவால் புளிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மையளிக்கிறது. எனவேதான் தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு 100 கிராம் தயிரில் 3.5 கிராம் புரதம் உள்ளது. இது தவிர பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன.

இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும், தயிர் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா..? ஆம்.. தயிர் அதிக சக்தி வாய்ந்த உணவு என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே அதை கொஞ்சம் அளவுக்கு மீறி சாப்பிட்டாலும் வாயு பிரச்சனை மற்றும் வயிற்றில் வீக்கத்தை அதிகரிக்கிறது. ஆனால் அலோபதி மருத்துவத்தில் இதைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என தெரிந்துகொள்ள பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பிரியங்கா ரோஹத்கியிடம் பேசினோம் .

தயிர் உண்மையில் வாயு வீக்கத்தை அதிகரிக்கிறதா என்ற கேள்விக்கு டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகையில், ”தயிர் ஒரு சக்தி வாய்ந்த உணவு என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது, இதை அதிகமாக உட்கொள்வது ஏற்கனவே வயிற்று பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனை அதிகரிக்கிறது. ஆனால் அலோபதியில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து எந்த ஆய்வும் வெளி வரவில்லை. மாறாக, இது புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரமாக நாங்கள் கருதுகிறோம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல பாக்டீரியாக்கள் இதில் நிறைய உள்ளன.

அதனால்தான் உடல் எடையை குறைக்க தயிர் சாப்பிட பரிந்துரைக்கிறோம். சொல்லப்போனால், ஒட்டுமொத்த தயிரால் எந்தத் தீங்கும் இல்லை. ஏற்கனவே வயிறு உப்புசம் அல்லது வாயு பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இது மிகச் சிலருக்கே ஏற்படும். தயிர் தீங்கு விளைவிப்பதாக உணர்ந்தால், வெறுமனே அல்லாமல் சாதத்துடன் சாப்பிட பாதிப்பு இருக்காது” என்று கூறினார்.

கீல்வாதம் வலி : கீல்வாதத்தின் வலியை தயிர் அதிகரிக்கிறது என்று ஆயுர்வேதத்திலும் நம்பப்படுகிறது. அதாவது தயிர் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதால், அது பியூரின்களாக உடைகிறது. பியூரின் மூட்டுகளில் படிகங்கள் வடிவில் குவியத் தொடங்குகிறது. ஆனால் மூட்டு வலிக்கும் தயிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகிறார். ”தயிர் சாப்பிடுவதால் மூட்டுவலி அதிகரிக்காது. இதுபற்றி அலோபதி மருத்துவத்தில் குறிப்பிடப்படவில்லை” என்று கூறுகிறார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment