அன்றாடம் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் குளுக்கோஸாக உடைக்கப்பட்டு, கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படுகிறது. இது உடலில் உள்ள செல்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி நாம் உயிர் வாழ்வதற்கு காரணமாக அமைகிறது.
நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் குளுக்கோஸை எப்படி உண்கின்றன மற்றும் அவற்றை வளர்சிதை மாற்றம் செய்கின்றன என்பது பற்றியும், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்படும் பொழுது செல்கள் அவற்றை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பது பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிளாட் ஸ்டோன் இன்ஸ்டிட்யூட் மற்றும் யூசி பிரான்சிஸ்கோ அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வயதானாலும் மூளையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர்.
கென் நக்காமுரா என்ற கிளாட்ஸ்டோன் ஆராய்ச்சியாளர் "மூளைக்கு அதிக அளவிலான குளுக்கோஸ் தேவைப்படும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆனால் நியூரான்கள் குளுக்கோஸை எந்த வகையில் சார்ந்து இருக்கின்றன என்பதும், அவை சர்க்கரையை உடைக்க என்ன மாதிரியான முறைகளை பின்பற்றுகின்றன என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை." என்று கூறுகிறார்.
நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவுகள் அனைத்தும் குளுக்கோஸ் ஆக உடைக்கப்படுகின்றன. உடைக்கப்பட்ட இந்த குளுக்கோஸானது கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அது உடல் முழுவதும் வழங்கப்பட்டு, செல்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதன் மூலமாக நாம் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கிறது. கிளயன் செல்கள் அல்லது மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள திசுக்களில் காணப்படும் செல்களானது பெரும்பாலான குளுக்கோஸை பயன்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிளையன் செல்கள் குளுக்கோஸை மறைமுகமாக லாக்டேட் என்ற வளர்சிதை மாற்ற பொருளாக மாற்றி நியூரான்களுக்கு வழங்குகின்றன. எனினும் இந்தக் கூற்றை ஆதரிப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த கூற்றுக்கு ஆதாரம் திரட்டும் விதமாக ப்ளூரி போட்டன்ட் ஸ்டெம் செல்ஸ் முறையை பயன்படுத்தி சுத்தமான மனித நியூரான்களை நக்காமுரா குழுவினர் உருவாக்கினர். கிளையன் செல்கள் இல்லாத மனிதன் நியூரான்களை ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்குவது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலான காரியமாக இருந்தது.
பின்னர் இந்த நியூரான்களை ட்ராக் செய்யக்கூடிய ஒரு லேபிள் வடிவத்தில் உள்ள குளுக்கோஸுடன் கலந்தனர். நியூரான்கள் குளுக்கோஸை பயன்படுத்துவதும், அதனை சிறிய வளர்ச்சிதை மாற்ற பொருட்களாக மாற்றுவதும் இந்த ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டது.
ஜீன் எடிட்டிங் முறையை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் நியூரான்களிலிருந்து இரண்டு முக்கிய புரதங்களை நீக்கினர். அதன் மூலமாக அவை எவ்வாறு வளர்சிதை மாற்ற பொருட்களை பயன்படுத்துகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இரண்டு புரதங்களில் ஒன்று குளுக்கோஸை பயன்படுத்தப்படுகிறது மற்றொன்று கிளைகாலிசிஸ் செயல்முறைக்கு காரணமாக அமைகிறது. இந்த புரதங்களில் ஒன்றை நீக்குவது மனித நியூரான்களில் குளுக்கோஸ் உடைப்பதற்கான செயல்முறையை முற்றிலுமாக நிறுத்தும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அடுத்தபடியாக எலிகளின் நியூரான்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. குளுக்கோஸைப் பெறுதல் மற்றும் கிளைகாலசிஸ் செயல்முறைக்கு காரணமான புரதங்கள் மூளை செல்களில் இருந்து நீக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த எலிகள் கற்பித்தல் மற்றும் நினைவுகள் பிரச்சனைகளை சந்தித்தன. இந்த ஆராய்ச்சி மூலமாக நியூரான்கள் எவ்வாறு அவற்றின் வழக்கமான செயல்முறைக்கு கிளைகாலசிஸை நாடி உள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிளைகாலிசிஸ் செயல்முறை மூலமாக ஆற்றல் கிடைக்காத போது நியூரான்கள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்கின்றனர் என்பது பற்றியும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
இதுவே ஒரு சில மூளை சார்ந்த நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நியூரான்கள் பிறவகையான ஆற்றல் மூலங்களான கேலக்டோஸ் போன்றவற்றை பயன்படுத்துகிறது. எனினும் கேலக்டோஸ் அவற்றிற்கு தேவையான ஆற்றலை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை. ஆகையால் இது குளுக்கோஸ் வளர்சிதை மாற்ற இழப்பிற்கு கேலக்டோஸால் முழுமையாக சமரசம் செய்ய முடியவில்லை என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
0 Comments:
Post a Comment