பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி பழத்தில் அதிகளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. எனவே இப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும் கொள்ள வேண்டும். மேலும், இப்பழத்தில் புற்றுநோயை தடுக்கக்கூடிய பண்புகள் (பப்பாளியில் உள்ள லைகோபீன் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது) உள்ளது. அது மட்டுமல்லாமல் நம்முடைய செரிமானத்திற்கும் உதவுகிறது, இதயத்தை பாதுகாக்கிறது, நல்ல கொழுப்பின் விளைவுகளை அதிகரிக்கிறது, உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கிறது. கூடுதலாக நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால், குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்தும் கொண்ட பப்பாளி பழம் உங்களுக்கு ஏற்ற உணவுகளில் ஒன்று.
இத்தனை நன்மைகளை கொண்டுள்ள பப்பாளி பழத்தில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளது என பார்ப்போமா…
ஒரு பப்பாளி பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே.. சராசரி அளவு கொண்ட ஒரு பப்பாளி பழத்தில் (ஏறக்குறைய 152 கிராம்) இருக்கும் ஊட்டச்சத்துகள்:
- கலோரி: 60
- கார்போஹைட்ரேட்: 15 கிராம்
- நார்ச்சத்து: 3 கிராம்
- புரதச்சத்து: 1 கிராம்
- கொழுப்பு: 0 கிராம்
- விட்டமின் சி: பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 157% உள்ளது
- விட்டமின் A: பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 33% உள்ளது
- ஃபோலேட்: பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 14% உள்ளது
- பொட்டாசியம்: பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 11 உள்ளது
ஹைதராபாத் நகரின் ஹைடெக் சிட்டியில் உள்ள கேர் மருத்துவமணையின் மூத்த டயட்டிசியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான சமீனா அன்சாரி பப்பாளி பழத்தின் நன்மைகள் குறித்து பகிர்ந்தவை இங்கே:
- ஊட்டச்சத்து நிறைந்தது: பப்பாளியில் விட்டமின் A மற்றும் C, ஃபோலேட், பொட்டாசியம் மிகுதியாக உள்ளது.
- செரிமானத்திற்கு உதவுகிறது: பப்பாளி பழத்தில் உள்ள பப்பாய்ன் என்ற என்சைம் செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை போக்குகிறது.
- ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்புகள்: பப்பாளி பழத்தில் அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், இது நம் மன அழுத்தத்தை குறைக்கவும் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தி: பப்பாளி பழத்தில் அதிகளவில் விட்டமின் சி இருப்பதால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்பட இது துணை புரிகிறது..
- பார்வை ஆரோக்கியம்: பப்பாளியில் விட்டமின் A மற்றும் இதர ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் கண்கள் ஆரோக்கியமாகவும், பார்வை குறைபாட்டையும் தடுக்க உதவுகிறது.
- சரும ஆரோக்கியம்: பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுவதோடு, காயத்தையும் விரைவில் குணமாக்குகிறது.
- அலர்ஜி: சிலருக்கு பப்பாளி பழம் ஒத்துக்கொள்ளாது. சாப்பிட்டால் அலர்ஜி ஆகிவிடும். பப்பாளி பழத்தை சாப்பிட்ட பிறகு ஏதாவது மோசமான எதிர்வினைகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள். அவரின் அறிவுரையை கேட்டு அதன்பிறகு உண்ணுங்கள்.
- நன்கு பழுத்தவை: முழுதாக விளைந்த பப்பாளி பழத்தை சாப்பிடும் போது தான் அதன் முழு சுவையும் ஊட்டச்சத்தும் நமக்கு கிடைக்கும்.
- பூச்சிக்கொல்லிகள்: பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படாத இயற்கையாக விளைந்த பப்பாளி பழத்தையே எப்போதும் சாப்பிடுங்கள்.
- பப்பாளி பழத்தில் என்சைம்கள் இருப்பதால் சில மருந்துகளோடு அவை கலப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகள். நீங்கள் ஏதாவது மருந்து உட்கொள்பவராக இருந்தால், இதன் விளைவுகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுதல் நலம்.
உடல் எடை குறைய உதவும் பப்பாளி :
பப்பாளி பழத்தில் குறைவான கலோரியும் அதிகமான நார்ச்சத்தும் உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் டயட்டில் இப்பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். “இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு நிறைய சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். மேலும் இதிலுள்ள பப்பாய்ன் என்ற என்சைம் செரிமானத்திற்கும் ஆரோக்கியமான மெட்டபாலிஸத்திற்கும் உதவுகிறது” என கூறுகிறார் அன்சாரி.
சர்க்கரை நோயாளிகள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?
சர்க்கரை வியாதி இருக்கிறது என்பதற்காக பப்பாளி பழம் சாப்பிடுவதை முழுதாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சாப்பிடுவதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவை சோதித்துப் பார்த்துக் கொள்வது அவசியமாகும். சரிவிகிதமான டயட்டிற்கு குறைந்த அளவே பழம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். “சர்க்கரை நோயாளிகள் அளவாக பப்பாளி பழத்தை சாப்பிடுவது பாதுகாப்பானதே. எந்தவொரு பழத்திலும் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். ஆகையால் எப்போதும் பழத்தை கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் டயட்டில் பப்பாளி பழத்தை எவ்வுளவு எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவரிடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டயட்டிசியனிடமோ கேட்டுக் கொள்வது நல்லது” என மேலும் விளக்கினார்.
கர்ப்பிணி பெண்களுக்கு பப்பாளி பழம் பாதுகாப்பானதா?
கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதே. “எனினும் தங்கள் டயட்டில் புதிய உணவை சேர்ப்பதற்கு முன் மருத்துவரின் அறிவுரையை கேட்பது நல்லது” என்று மருத்துவர் கூறுகிறார்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அன்சாரி கூறுகிறார். அவை,
No comments:
Post a Comment