Search

தங்கத்திற்கு நாம் இவ்வளவு வரி செலுத்துகிறோமா? தெரிந்துகொள்ளுங்கள்..!

 தங்கம் எல்லோரும் வாங்குகிறோம்... ஆனால் அந்த தங்கத்திற்கு வரியாக மட்டும் எவ்வளவு செலுத்துகிறோம் தெரியுமா?



தங்கம், நகையாக நாம் கையில் வந்து சேரும் போது, மொத்தமாக சுமார் 18 சதவிதம் அளவிற்கு வரியாக மட்டும் செலுத்தி இருப்போம்.. இப்போது ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கும் போது எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்ற ஒரு கணக்கு பார்க்கலாம்.

இறக்குமதி வரி என்பது 10 சதவிதம், அதாவது 10 ஆயிரம் ரூபாய், Agriculture Infrastructure Cess என்று 5 சதவிதம், அதாவது 5 ஆயிரம் ரூபாய்.

நகையாக நாம் வாங்கும் தங்கத்திற்கு 3%, அதாவது 3 ஆயிரம் ரூபாய். மொத்தமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கும் தங்கத்தில், 18 ஆயிரம் வரி மட்டும். இது போக செய்கூலி சேதாரம் ஒரு 15 சதவிதம் என்று வைத்து கொண்டால், அது ஒரு 15 ஆயிரம்..

எனவே, ஒரு லட்சம் ரூபாய் தங்க நகையில், வரிகள் மற்றும் செய்கூலி சேதாரமாக மட்டும் ரூ. 33,000 கொடுக்கிறோம்.


0 Comments:

Post a Comment