Search

மாம்பழங்களை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா..? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்..?

 கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வரும் 2 விஷயங்கள் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் சுவையான மாம்பழங்கள் தான். நாம் அனைவரும் கோடையில் மாம்பழங்களை சாப்பிட மிகவும் ஆவலாக இருக்கிறோம்.

தற்போது நாட்டில் கோடை காலம் நிலவி வரும் சூழலில் ஜூஸியான மாம்பழம் அதிகம் விற்பனையாகி வருகிறது. மாம்பழம் மிகவும் ஆரோக்கியமானது என்றாலும் இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மாம்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகள் அல்லது பக்கவிளைவுகளை இங்கே பார்க்கலாம்.

அதிக சர்க்கரை : இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் அடங்கிய மாம்பழங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானவை. எனினும் இந்த பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. இதிலிருக்கும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே நீரிழிவு நோயாளியாகள் மாம்பழங்களை சாப்பிடும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. அதே போல மாம்பழத்தில் அதிக சர்க்கரை உளளடக்கம் இருப்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பாக இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.

வயிற்றுப்போக்கு ஏற்படலாம் : மாம்பழத்தில் அதிகம் நார்ச்சத்து இருக்கிறது. இந்த சூழலில் மாம்பழங்கள் அதிகம் சாப்பிடுவது குடல் எரிச்சலை ஏற்படுத்தலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள எந்த பழமும் வயிற்று போக்கை உண்டாக்க கூடியது. எனவே மாம்பழங்களை அதிகம் சாப்பிடாமல் கட்டுப்படுத்தி கொள்ளவது கோடையில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

எடை அதிகரிக்க கூடும் : சுவைமிகுந்தமாம்பழங்களில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த பழங்களை அதிகம் எடுத்து கொள்வது எடை குறைப்பு முயற்சிக்கு தடையாக இருக்கும். மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவது எடையை கூட்டும் என்பதால், ஒரு நல்ல உடலமைப்பை பராமரிக்க விரும்புவோர் மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிரக்க வேண்டும்.

அலர்ஜி விளைவுகள் : மாம்பழங்களில் Urushiol என்ற கெமிக்கல் இருக்கிறது. இந்த கெமிக்கலுக்கு சகிப்புத்தன்மை குறைவாக உள்ள நபர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிட்டால் தோல் அழற்சி ஏற்படும். இதன் காரணமாக சருமத்தில் வீக்கம் மற்றும் அரிப்பு ஏற்படலாம். மாம்பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் சில அலர்ஜி ரியாக்ஷன்கள் ஏற்படலாம் மற்றும் ரன்னி நோஸ், வயிற்று வலி போன்றவற்றால் பாதிக்கப்படலாம். மாம்பழங்களை அதிகம் எடுத்து கொள்வது யூர்டிகேரியா போன்ற தோல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

அனாபிலாக்டிக் ஷாக் (Anaphylactic Shock): மாம்பழங்கள் ஒரு சிலருக்கு Anaphylactic Shock-ஐ ஏற்படுத்த கூடும். இது ஒரு அலர்ஜி ரியாக்ஷன் ஆகும். உடனடியாக இதற்கு சிகிச்சையளிக்காவிட்டால் குமட்டல், வாந்தி, அதிர்ச்சி மற்றும் சுயநினைவின்மைக்கு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.

வயிற்று பிரச்சனைகள் : University of Virginia Health System-ன் ஆய்வின்படி குளுக்கோஸுடன் ஒப்பிடும்போது மாம்பழங்களில் பிரக்டோஸ் அதிகம் உள்ளது. இது உடலில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. இது பிரக்டோஸை உறிஞ்சுவதை கடினமாக்குகிறது. இந்த கண்டிஷன் வயிற்றில் வீக்கம் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் வயிற்றில் ஏதேனும் அஜீரண சிக்கலை எதிர்கொண்டால், மாம்பழங்களை அதிகம் சாப்பிடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்..? மாம்பழத்தை ஒரு நாளைக்கு சுமார் 2 கப் (330 கிராம்) வரை சாப்பிடுவது நல்லது. மாம்பழம் சுவையானதுதான் என்றாலும் மற்ற பழங்களை விட இதில் அதிக சர்க்கரை உள்ளது, எனவே மிதமான அளவில் மாம்பழம் சாப்பிடுங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகபட்சமாக அரை கப் சாப்பிடலாம். அதுவும் கட்டுப்பாட்டில் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.


 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment