இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..! - Agri Info

Adding Green to your Life

May 23, 2023

இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

 பொதுவாகவே நாம் சில உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது அவற்றின் சுவையை அதிகரிப்பதற்கும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்பவும் சில மசாலாக்களையோ அல்லது சுவையூட்டிகளையோ பயன்படுத்துவது வழக்கமானது தான். ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது அவற்றில் சுவையூட்டிகளை பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக நம்மில் பலரும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களோடு சர்க்கரை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் அவை உடலுக்கு தீங்கை விளைவிக்கலாம். அந்த வகையில் எந்தெந்த உணவு பொருட்களோடு சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காலை உணவில் சேர்க்கப்படும் தானியங்கள்: பெரும்பாலும் காலை உணவாக நாம் உட்கொள்ளும் தானிய வகைகளோடு பாலை சேர்த்து உட்கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். நாம் சேர்க்கும் பாலிலேயே மிக அதிக அளவில் சர்க்கரை ஏற்கனவே இருப்பதால் கூடுதலாக சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

பழ இனிப்புகள்: பழங்களை சேர்த்து தயாரிக்கும் இனிப்பு வகைகளை நீங்கள் விரும்பி உட்கொள்பவராக இருந்தால் முடிந்த அளவு அவற்றுடன் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு அதிக அளவில் இனிப்பு சுவை தேவைப்படும் பட்சத்தில் அதிக அளவு பழங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு தேவையான இனிப்பு சுவையை பெற முடியும்.

காபி : பெரும்பாலான மக்கள் காபியுடன் சர்க்கரை சேர்த்து அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் காபி குடிக்கும் போது அது பல்வேறு வித நன்மைகளை கொடுக்கும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்: உங்களது உணவு பழக்க வழக்கம் மற்றும் உணவு கட்டுப்பாட்டின் அளவை பொறுத்து தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய சர்க்கரையின் அளவானது மாறுபடும். “அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்” பரிந்துரையின்படி ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஒன்பது டீஸ்பூன் வரை சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment