தற்போதையை காலகட்டத்தில் வங்கி கணக்கு இல்லாத நபரை பார்ப்பது மிகவும் அரிதான விஷயத்தில் ஒன்று. ஏனென்றால், இன்று பிறந்த குழந்தை முதல் அனைவரிடமும் வங்கி கணக்கு இருக்கும். இன்னும் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்போம்.
குறிப்பாக, தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள். எந்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் சம்பள வங்கி கணக்கு என பல கணக்கு நமது பெயரில் இருக்கும்.ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம். 1-க்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் அதற்கான விதி என்ன என நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா?. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இதற்கான தகவல்களை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர். சிலர் இதை விட அதிகமான வங்கி கணக்கு வைத்துள்ளனர். ஏனென்றால், இந்தியாவில் வங்கிக் கணக்கு திறப்பதற்கு எந்த வரம்பும் இல்லை. வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே, ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். அதே சமயம் அதை நிர்வாகிப்பதும் எளிது.
உங்கள் கணக்குகளில் இருந்து சரியான பரிவர்த்தனைகளை தொடர்ந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. நீண்ட காலமாக உங்கள் வங்கி கணக்கை நீங்கள் உபயோகிக்காமல் இருந்தால், வங்கி உங்கள் கணக்கை மூடலாம். எனவே, தான் உங்கள் எல்லா கணக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பல வங்கிக் கணக்குகளைத் திறக்கும் போது ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து வங்கிகளும் சம்பளக் கணக்கைத் தவிர சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருப்பதைக் கட்டாயமாக்கியுள்ளன. அதாவது, உங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க வேண்டும். இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை கழிக்கப்படும்.
கட்டணம் கழித்த பிறகும் நீங்கள் குறைந்தபட்ச கணக்கை பராமரிக்கவில்லை என்றால்.. உங்கள் வங்கி கணக்கு எதிர்மறையாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் குறைந்தபட்ச இருப்பு பற்றி கவனமாக இருக்க வேண்டும். வங்கிக் கணக்கை இந்த முறையில் சரியாக நிர்வகிக்கலாம்.
அதிக கணக்குகள் மூலம் வங்கிகள் பல நன்மைகளைப் பெறுகின்றன. ஒவ்வொரு வங்கியும் செய்திகளை அனுப்புவதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன. வங்கிக் கணக்கை பராமரிப்பதற்கான செலவையும் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் டெபிட் கார்டுக்கு வங்கி ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்குத் தேவையான வங்கிக் கணக்குகளைத் திறக்கவும். இது உங்கள் சேமிப்பை பத்திரமாக வைத்திருக்க உதவும்.
No comments:
Post a Comment